இந்தியாவில் ஆறு அணு உலைகளை அமைக்கிறது பிரான்ஸ்

ஆறு புதிய அணு உலைகளை இந்தியாவில் கட்டும் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அரசு நிறுவனமான அரீவாவும், இந்தியாவின் IAEC -யும் பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டே மற்றும் பிரதமர் மோடி தலைமையில் கையெழுத்திட உள்ளது, இந்தியா இதுவரை புதிய அணு உலைகள் கட்ட ரஷ்யாவிடமே ஒப்பந்தங்கள் போட்டு வந்தது, ஆனால் ரஷ்ய அணு உலைகளில் பிரச்சனைகள் இருப்பதால் வேறு நாடுகளுடன் சேர்ந்து அணு உலை கட்டுமானத்தில் ஈடுபட உள்ளது.

இந்தியாவும் பிரான்ஸ் நாடும் சுமார் ஆறு அணு உலைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கட்ட திட்டமிட்டுள்ளது, மேலும் கட்டுமானத்தை மிக துரிதமாக முடிக்கவும் திட்டமிட்டுள்ளது,

இந்த புதிய அணு உலைகள் மேக் இன் இந்தியா திட்டம் மூலமே கட்டப்படவுள்ளது, இதனால் இந்திய அணு ஆய்வாளர்களால் மொத்த அணு உலையும் ஆராய முடியும், மேலும் அணு உலைகளில் மாற்றமே அல்லது வேறு நாட்டு அணு எரிபொருளையோ கூட இந்த உலையில் சேர்க்க முடியும்.

கூடன் குளம் அணு உலை ரஷ்யா உதவியுடன் செயல்பட்டு வருகிறது, இருப்பினும் அதன் தேவைகளுக்கு ரஷ்யாவையே நாட வேண்டியுள்ளது, அதே போன்ற அணு உலைகளை பாகிஸ்தானுக்கும் ரஷ்யா கொடுப்பதால் இந்தியா ரஷ்யாவுடன் மேலும் இது போன்ற திட்டங்களைத் தொடர தயக்கம் காட்டி வருகிறது.

பிரான்ஸ் அதிபர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார், அதன் பிறகு நடக்கும் கூட்டங்களில் அணு உலை, ரயில் எஞ்சின் திட்டம், நீர் மூழ்கி கப்பல் கட்டும் திட்டம் மற்றும் ரபேல் போர் விமான கொள்முதல் போன்றவயும் விவாதிக்கப்படவுள்ளது, இதன் மொத்த மதிப்பீடு சுமார் 2 லட்சம் கோடிக்கு மேல் ஆகும், இருப்பினும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவை அனைத்தும் வருவதால் பாதி தொகையை இந்தியாவிலேயே பிரான்ஸ் முதலீடு செய்யும்.