தரம் குறைந்த பாகங்களை தயாரித்ததால் HAL-உடன் போட்ட ஒப்பந்தத்தை முறித்தது Boeing

 

இந்திய கப்பல் படைக்கு எதிரி நீர்மூழ்கி கப்பல்களை கண்டு பிடித்து அழிக்கும் அமெரிக்காவின் அதி நவீன Boeing P 8 I என்னும் விமானம் வாங்கப் பட்டது, முதல் ஒப்பந்தத்தில் சுமார் 8 விமானங்களும் அடுத்த ஒப்பந்தத்தில் சுமார் 4 விமானனம் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது, அதில் முதல் 8 க்கு ஏற்கனவே ஒப்பந்தம் போட்டு சுமார் 7 விமானங்களை அமெரிக்கா வழங்கியது, இவை இந்திய கப்பல் படையில் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்த விமானத்தில் சில இந்திய பாகங்களைப் பொருத்த இந்திய கப்பல் படை திட்டமிட்டிருந்தது, அதில் நண்பனா எதிரியா என்று கண்டுபிடிக்கும் சாதனங்களும், தொலைத் தொடர்பு சாதனங்களும் அடக்கம்.

மேலும் இந்திய விமான தயாரிப்பு நிறுவனமான HAL- இடம் Boeing நிறுவனம் இந்தியாவிற்கான 8 விமானங்களிலும் ஆயுதங்களை வீச நடுவானிலேயே திறக்கும் கதவுகளை செய்ய ஒப்பந்தம் போட்டிருந்தது, மேலும் அவைகள் தான் முதல் 7 விமானங்களிலும் பொருத்தப்பட்டிருந்தது, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் ஆகும்.

ஆனால் HAL தயாரித்த இந்த கதவுகளின் தரம் குறைவாக இருப்பதாக கூறி அதனுடனான ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனமான Boeing ரத்து செய்துள்ளது.

இந்தியாவின் HAL நிறுவனமே இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை செய்து வருகிறது.