எல்லைக்கு அப்பால் இருந்து சுடும் இடங்களை கண்டறியும் ராடர்களை வாங்குகிறது ராணுவம்

 

எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் சுடும் இடங்களை சரியாக கண்டு பிடிக்கும் ராடர்களை வாங்க ராணுவம் தயாராகி வருகிறது, இந்தியா ஏற்கனவே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிடமிருந்து சுமார் 20 ராடர்களை வாங்கியிருந்தது, பிறகு இந்திய அரசு நிறுவனமான BEL-இடமிருந்து சுமார் 30 ராடர்களை வாங்கி தற்போது வரை பயன்படுத்தி வருகிறது, இருப்பினும் அதன் தேவைப்பாடு இன்னும் அதிகம் உள்ளதால், தற்போதும் வாங்க தயாராகி வருகிறது.

ராணுவத்தின் ஆர்ட்டில்லரிகள், ராக்கெட்டுகள், மற்றும் மோர்ட்டார் குண்டுகள் அதிக சக்தி வாய்ந்தவை, போரின் போது இது அதிக அளவில் பயன்படுத்தப்படும், எளிதாக கொண்டு செல்வது மற்றும் கடினமாக தாக்குவது போன்ற காரணங்களினால், எல்லா நாட்டு ராணுவங்களுமே இதை பயன்படுத்துகிறது.

81 mm Mortar

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சுடும் பாகிஸ்தான் பல நேரங்களில் 81 mm  அளவுள்ள மோர்ட்டார்களை பயன்படுத்தி இந்திய நிலைகளை தாக்கி வருகிறது, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்திய பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில், இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் தொடர்ந்து கன ரக மோர்ட்டார்களை எல்லைப் பகுதியில் குவிப்பதை குறித்து கவலை தெரிவித்தனர், மேலும் இவற்றை எல்லையிலிருந்து அப்புறப்படுத்தவும் கேட்டுக் கொண்டனர், ஆனால் பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

கார்கில் போரின் போது, சுமார் 80% இந்திய உயிரிழப்புகள் பாகிஸ்தானின் ஆர்ட்டில்லரி மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலமே ஏற்பட்டது, கார்கில் போருக்கு முன்பே இந்திய ராணுவ அதிகாரிகள் இந்திய அரசிடம் இது போன்ற ராடர்களை கொள்முதல் செய்ய கேட்ட போது அதை அலட்சியப்படுத்தி வந்தனர், அதன் அவசியத்தை போருக்கு பின்பே உணர்ந்து அமெரிக்காவிடமிருந்து அவசர அவரசமாக சுமார் 20 ராடர்களை வாங்கியது இந்தியா, பிறகு அது போன்ற ராடர்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது,

தற்போதைய திட்டப்படி இந்திய ராணுவம் ஒரு வேளை இந்திய அரசு நிறுவனங்களிடமிருந்தே இதை வாங்கலாம், அல்லது நவீன ராடர்களை வெளிநாடுகளிடமிருந்தும் வாங்கலாம், அதன் எண்ணிக்கை மற்ற தகவல் குறித்து கருத்து கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

பொதுவாக இது போன்ற ராடர்கள் சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பை தனது கணிப்பொறியில் சேமித்து வைத்து அதை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டு இருக்கும், ஏதாவது குண்டுகள் அதன் பகுதியில் வந்தால் அது எங்கிருந்து வந்தது என்பதை குண்டின் திசை வேகம் மற்றும் உயரத்தை வைத்து கணக்கிட்டு துல்லியமாக கூறும், மேலும் அந்த இடத்தை அருகில் உள்ள தோழமை படைகளுக்கும் தெரிவிக்கும், இதன் மூலம் எதிரி மீது தாக்குதலை மிக துல்லியமாக நடத்த முடியும்

EL/M 2084 3D MF

 

இஸ்ரேல் இதே யுக்தியை தான் கையாண்டு ஹமாஸ் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது, ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது வீசும் குண்டுகளை இஸ்ரேலின் EL/M 2084 என்ற பல்திறன் கொண்ட ராடர் கண்காணித்து தாமிர் ஏவுகணையை வீசி குண்டை வானிலேயே அழிக்கும், மேலும் அதே ராடர் குண்டு எங்கிருத்து வந்தது என்ற தகவலையும் இஸ்ரேல் விமானப் படைக்கு அளிக்கும், உடனே இஸ்ரேலிய போர் விமானங்கள் துல்லியமாக அந்த இடத்தையும் தாக்கி அழித்து விடும்.