இந்தியாவுடன் சேர்ந்து சரக்கு விமானம் தயாரிக்கும் திட்டத்தை கை விட்டது ரஷ்யா

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து நடுத்தர பல்திறன் கொண்ட ராணுவ சரக்கு விமானத்தை தயாரிக்க  2008-க்கு முன்பே பரஸ்பரம் முடிவு செய்து கொண்டனர், இதன் மூலம் இந்தியா சுமார் 100 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும், ரஷ்யாவும் சுமார்  100 விமானங்களை ரஷ்யாவிலேயே  தயாரிக்கும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இது வரை இறுதியாகவில்லை.

அதற்கு முக்கிய காரணமாக அதன் என்ஜின் திறன் சரியில்லை என்று இந்திய விமானப் படை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர், மேலும் புதிய அதீத திறனுள்ள PS 90 A எஞ்சினையே இந்திய அதிகாரிகள் விரும்பினர், அதற்கான பரஸ்பர ஒத்துழைப்பும் இதுவரை இந்தியாவினால் ரஷ்யாவிற்கு வழங்கப்படவில்லை,

ரஷ்யா 2015-ம் ஆண்டிற்குள் இந்தியாவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து , முதல் விமான பரிசோதனையை 2017-இல் ஆரம்பித்து   தொடர்  தயாரிப்பை  2019-ற்குள் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது, ஆனால் இந்தியா சார்பில் இதுவரை எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படாததால்  இந்தியாவை இந்த திட்டத்திலிருந்து விலக்கி ரஷ்யாவே தனித்து செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்திய விமானப் படைக்கு நடுத்தர சரக்கு விமானத்தின் தேவைப் பாடு அதிகம் உள்ளது, இந்த MTA IL 214 மூலம் சுமார் 25 டன் எடையுள்ள சரக்குகளையோ அல்லது சுமார் 90 ராணுவ வீரர்களையோ சுமார் 3000 கிலோமீட்டர் வரை கொண்டு செல்ல உதவும். ரஷ்யாவிற்கும் இதன் தேவைப்பாடு மிக அதிகம்,

ஆனால், சமீபத்தில் இந்தியாவின் டாடா நிறுவனம் ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 56 C 295 நடுத்தர சரக்கு விமானத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது, இந்திய விமானப் படை சுமார் 56 C 295 விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தை மிக விரைவில் இறுதி செய்யவுள்ளது, இதன் திறனும் MTA IL 214 -இன் திறனும் ஒன்றுபட்டவை, அதன் எஞ்சின் அமைப்பை தவிர,

எனவே இந்திய விமானப்படைக்கு நடுத்தர விமானங்கள் வேண்டும் பட்சத்தில் C 295 விமானத்தின் ஆர்டர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது