6000 கோடி செலவில் வான்வெளித் துறை பூங்காவை அமைக்கிறது ரிலையன்ஸ்

 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே இந்தியாவின் முதல் பல்நோக்கு விண்வெளித் துறைக்கான பூங்காவை அமைக்கவுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது இதற்கு திருபாய் அம்பானி ஏரோ ஸ்பேஸ் பார்க் (DAAP) என்று பெயரிட்டுள்ளது. இங்கு ராணுவம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் ஹெலிகாப்டர்களை தயாரிக்க போவதாக தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, அடிப்படை கட்டமைப்பு, என்ஜின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு , ஒருங்கிணைத்தல் மற்றும் தயாரித்தல் போன்ற வேலைகளை செய்யப்படும்.

இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு தேவையான பொருட்களை தனியாரிடமிருந்து பெற திட்டமிட்டுள்ளது, இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு இருக்கும் என்றும் அதில் பெரிய அளவை ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ரிலையன்ஸ் குழுமம், இந்தியாவில் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான பிபாவ்வாவ் – ய் கையகப்படுத்தி விட்டதாகவும், அங்கு இருக்கும் பெரிய உலர் கப்பல் கட்டும் தளத்தில் மிகப் பெரிய போர்க் கப்பல்களை கட்ட முடியும் என்றும் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி கூறினார்.

இதற்கு தேவையான நிலத்தை மாநில அரசின் உதவியோடு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு பெறப்பட்டதாகவும் , இதன் மூலம் சுமார் 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஏற்கனவே இந்திய ராணுவத்திற்கும் கப்பல் படைக்கும் ஹெலிகாப்ட்டர் வாங்கும் ஒப்பந்தத்தை வெளி நாட்டு நிறுவங்களுடன் பெற முயற்சி செய்வது குறிப்பிடதக்கது.