ரிலையன்ஸ்-உடன் போட்ட ஒப்பந்தத்தை L&T-க்கு கொடுத்தது ரஷ்யா

 

இந்திய கப்பல் படையில் உள்ள 3 கிலோ ரக நீர்மூழ்கிகளை நவீனப்படுத்தும் ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் சேர்ந்து ரிலையன்ஸ் இந்தியாவின் உள்ள தனது பிபாவாவ் கப்பல் கட்டும் தளத்தில் செய்ய திட்டமிட்டிருந்தது, ஆனால் பிபாவாவ் தளத்தில் சில குறைபாடுகள் இருப்பதால் ரிலையன்ஸ்-உடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு L&T உடன் கை கோர்த்துள்ளது ரஷ்யா.

சுமார் 5000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கை நழுவி போனதால் ரிலையன்ஸ் நிறுவனம் பெருத்த ஏமாற்றத்திற்குள் உள்ளது. ரஷ்யாவுடன் ரிலையன்ஸ் நீர்மூழ்கிகள் சம்பந்தமாக பல ஒப்பந்தங்களை செய்துள்ளது, அதிலும் குறிப்பாக கிலோ ரக டீசலால் இயங்கும் நீர்மூழ்கிகளை நவீனப்படுத்தவோ வேறு வேலைகளை செய்யவோ ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு முழு அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தரப்பில் கூறும் போது பிபாவாவ் கப்பல் கட்டும் தளத்தில் போதிய வசதிகள் இல்லாததால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிபாது இயலாத காரியம், எனவே வேறு ஒரு நிறுவனத்துடன் கை கோர்ப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது, ஆராய்ந்து பார்த்ததில் L&T நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அதற்கு சரியாக இருக்கும் என்பதால் அங்கேயே நவீனப்படுத்தும் வேலையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 5000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் இந்தியா தனது மூன்று கிலோ ரக நீர்மூழ்கிகளான  , INS சிந்துத்வஜ், INS சிந்துரஸ்த்ரா, INS சிந்துராஜ் ஆகியவற்றை நவீன தொழில் நுட்பங்களுடன் நவீனப்படுத்துகிறது.

மேலும் INS சிந்துகேசரி  என்ற கிலோ ரக நீர்மூழ்கி கப்பல் ஏற்கனவே ரஷ்யாவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து நவீனப்படுத்தும் பணிகளும் சுமார் 27 மாத காலத்திற்குள் நிறைவடைந்து விடும்,