பாகிஸ்தானுக்கு F 16 போர் விமானங்கள் விற்பனை, தடை போட்டது அமெரிக்க காங்கிரஸ்

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தின் பாகிஸ்தானின் வேண்டுகோளான போர் விமான விற்பனையை குறித்து விவாதிக்கப்பட்டது, விவாதத்தில் பாகிஸ்தானுக்கு புதிதாக போர் விமானங்கள் கொடுக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தடையும் போட்டது, இதனால் பாகிஸ்தானுக்கு புதிய F  16 போர் விமானங்கள் வழங்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது.

பாகிஸ்தான் விமானப்படை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான F  16-ய் பயன் படுத்தி வருகிறது, மேலும் அது போன்ற விமானங்களை வாங்க அமெரிக்காவை நிர்பந்தித்து வந்தது, இந்தியாவுடன் உள்ள மேம்பட்ட உறவின் காரணமாக இந்த முறை விமானங்களை கொடுக்க கூடாது என்று அமெரிக்க காங்கிரெஸ் முடிவெடுத்துள்ளது.

இதற்கு பல காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளது செனட் சபை, முக்கியமாக இந்த விமானங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் என்றும், அது தெற்காசியாவில் பதற்ற நிலையே உண்டு பண்ணும் என்றும் தெரிவித்துள்ளது, பாகிஸ்தான் பொதுவாக தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரிலேயே அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களையும் விமானங்களையும் வாங்கி குவித்து வருகிறது.

ஆனால் அவை அனைத்தையுமே அது இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்தும் என்றும், இந்தியா எப்போதுமே அமைதி பேச்சு வார்த்தையை விரும்புவதாகவும், ஆனால் பாகிஸ்தான் அரசின் உதவியுடன் செயல்படும் தீவிரவாதிகள் இந்தியாவை தாக்குவதாகவும், அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் உளவுத்துறையும் உதவி செய்வதாகவும் அமெரிக்க செனட் உறுப்பினர் எலியாட் தெரிவித்தார்.

காங்கிரெஸ் உறுப்பினர்களுக்கு, ப்ரூகிங்க்ஸ் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இந்திய விமானப்படை தளமான பதான்கோட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுத் துறை மூளையாக செயல்பட்டதை விளக்கிக் கூறினார்.

அப்போது பேசிய செனட் உறுப்பினர், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை பல முறை முன்வந்து தொடங்கியும் பாகிஸ்தான் அதற்கு ஒத்துழைக்காமல் தீவிரவாதிகள் மூலம் சீர்குலைப்பது தெளிவாகிறது, எனவே பாகிஸ்தானுடன் அமெரிக்கா தனது உறவை மெதுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பிறகு, அமெரிக்க செனட் சபை பாகிஸ்தானின் போர் விமான வேண்டுகோளை நிராகரித்து அதற்கு தடையும் விதித்தது