ஜப்பானிடமிருந்து கடலிலிருந்து பறக்கும் இறங்கும் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்தது இந்தியா

இந்திய கப்பல் படைக்கு மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்காக கடலிலிருந்து பறக்கும் இறங்கும் US 2i விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்து அதில் கையெழுத்திட தயாராக இருப்பதாக அரசு செய்திகள் தெரிவிகின்றன. கப்பல் படைக்கு சுமார் 12 விமானங்களும் கடலோர காவல் படைக்கு சுமார் 3 விமானங்களும் வாங்கப்படவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் முதல் இரண்டு விமானங்களை ஜப்பானிடமிருந்து நேரடியாக வாங்கும், மற்ற விமானங்களை இந்தியாவின் தனியார் துறை மூலம் தயாரித்து அவர்களிடமிருந்தே வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, இந்தோனேசியா அரசும் இதே விமானங்களை வாங்க முடிவு செய்திருந்தது, அநேகமாக இந்திய தனியாரிடமிருந்து தான் அதை வாங்கும் என்று AIN  செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

இந்தியாவில் தயாரிப்பு மற்றும் ஒன்றுபடுத்துதல் வேலைகளை செய்யும் போது அதன் மொத்த மதிப்பில் சுமார் 25% வரை விலை குறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆனாலும் அது வரிகள் மூலம் கழிக்கப் பட்டு விடும் என்றும் ஷின்மயவா நிறுவனத்தின் இந்திய இயக்குனர் சமடார் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, இந்தியாவில் இந்த விமானத்தை தயாரிக்க பிபாவாவ் நிறுவனத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விமானங்கள் கடல் மேற்பரப்பில் இருந்து பறக்கும், மற்றும் கடல் மேற்பரப்பிலேயே இறங்கவும் செய்யும், எவ்வித கடல் சீற்றத்திலும் இதனால் பறக்கவும் இறங்கவும் முடியும், மேலும் சாதாரண விமான ஓடுபாதையிலும் பறக்கவும் இறங்கவும் முடியும், அநேகமாக இது கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்,