அணு குண்டு சோதனையை செய்தது வட கொரியா

வட கொரியா இன்று காலை தனது நாட்டின் வட கிழக்கு பகுதியில் உள்ள அணு குண்டு சோதனை தளமான புங்கி-ரீ என்னும் பகுதியில் அதிக சக்தி வாய்ந்த அணு குண்டை வெடிக்க செய்து சோதனை செய்தது. இதனால் நடுத்தர அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவின் 5.1 ஆக பதிவானது.

கடந்த வருடமும் இதே போன்று ஒரு அணு குண்டை வெடிக்க செய்து சோதனை செய்தது, இதற்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன, அமெரிக்காவும் வட கொரியாவின் இந்த செயலை கண்டித்தது. அனால் வட கொரியாவோ இதை பற்றி எதுவும் சொல்லாமல் தொடர்ந்து பெரிய அளவில் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது.

சமீபத்தில் தான் முதல் முறையாக தனது நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணைகளை வீசி சோதனை செய்தது. இது போன்ற தொழில் நுட்பம் ஒரு சில முன்னேறிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இந்தியா கூட இது போன்ற சோதனைகளை செய்யும் இறுதி கட்டத்தில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதும் சோதனை செய்ததில் அது தோல்வியில் முடிவடைந்தது, ஆனாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சோதனையில் மீண்டும் வெற்றிகரமாக செய்து முடித்தது, அதோடு நேற்றும் தொலை தூரம் வரை அதாவது அமெரிக்கா  வரை சென்று தாக்கும் ஏவுகணையையும் சோதனை செய்தது.

இதன் மூலம் வட கொரியா எதிரி நாடுகள் மேல் அதி பயங்கர அணு ஆயுத தாக்குதலை  திறமையுடன் செயல்படுத்தும் சோதனைகளை மிக சிறப்பாக செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் கொரியாவும் ஜப்பானும் இதற்கு முன்பு கூறுகையில் வட கொரியா இனி மேலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் வழிகாட்டுதலின் பேரில் சிறிதாக்கப்பட்ட சக்தி மிக்க ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது