ஐரோப்பிய நிறுவனமான அகுஸ்தாவுடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர் தயாரிக்கிறது டாட்டா

 

இத்தாலி நாட்டை சேர்ந்த அகுஸ்தா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் டாட்டா நிறுவனம் சேர்ந்து ஒரு புதிய நிறுவனமான IRL – Indian Rotor craft Limited -ஐ ஆரம்பித்துள்ளன, இந்தியாவின் மேக் இன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு தயாரிப்புகளை இந்தியாவில் செய்ய வெளி நாட்டு நிறுவனத்தின் 49% முதலீடும் இந்திய நிறுவனத்தின் 51 % முதலீடும் தேவை, அது தற்போது வெளி நாட்டு நிறுவனங்களின் வான்வெளி தயாரிப்புகளுக்கு 74% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மீதி பங்கு இந்திய நிறுவனத்திடம் இருக்கும்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் ஐரோப்பாவில் பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு பிறகு கைவிடப்பட்ட தனியார் நிறுவனங்கள் அதிகம் விரும்பும் AW 119 ஹெலிகாப்டர்களை இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தயாரிக்கும், இதற்கான முதல் கட்ட அங்கீகாரத்தை இந்திய அரசு தற்போது தான் டாட்டாவிற்கும் அகுஸ்தா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது.

ஏற்கனவே இந்திய ராணுவத்திற்கு இது போன்ற எடை குறைந்த ஹெலிகாப்டர்கள் அதிகம் தேவைப்படுகிறது, அதற்காக ரஷ்யாவின் Ka 226 ஹெலிகாப்டரை இந்தியா தேர்வு செய்தது, இந்த புதிய ஹெலிகாப்டர்கள் பழைய சீதக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்களை படையிலிருந்து நீக்கும், இருப்பினும் இதனோடு வேறு இரண்டு மாடல் ஹெலிகாப்டர்களையும் சேர்க்க இந்திய பாதுகாப்புத் துறை முடிவெடுத்துள்ளது,

அதன் படி ரஷ்ய தயாரிப்பான Mi 226 உடன், வேறொரு ஐரோப்பிய மாடலும், இந்தியாவின் HAL தயாரித்த இலகு ரக ஹெலிகாப்டரும் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன, எனவே டாட்டாவின் தயாரிப்பான AW 119 ஹெலிகாப்டரும் இதில் இடம்பெறும் என்று கருதப்படுகிறது.

டாட்டாவைப் பொறுத்தவரையில் அவர்களின் முக்கிய குறிக்கோள் இந்த ஹெலிகாப்டரை தயாரித்து தனியாருக்கு வழங்குவதே என்றும், பல தனியார் மற்றும் மாநில அரசின் போக்குவரத்திற்கு இந்த வகை ஹெலிகாப்டரின் தேவை அதிகம் உள்ளது என்றும், ஆனாலும் ராணுவத்தின் இலகு ரக ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்திலும் போட்டி போடப் போவதாக தெரிவித்துள்ளது.