இரண்டாவது விமானம் தாங்கி போர் கப்பல் கட்டுவதை ஒப்புக் கொண்டது சீனா

சீனா தனது கப்பல் படைக்காக மிகப் பெரிய விமானம் தாங்கி போர் கப்பலை கட்டி வருகிறது, ஆனால் இதை குறித்து வெளி உலகுக்கு தெரியப்படுத்தவில்லை, மேலும் அதன் பணிகளை மிக ரகசியமாக செய்து வந்தது, ஆனால் ஐரோப்பிய செய்தி நிறுவனமான ஜேன்ஸ் செயற்கோளை வாடகைக்கு வாங்கி சீனாவின் ஒரு துறைமுகத்தை ஆராய்ந்து பார்த்ததில் பெரிய கப்பல் ஒன்று கட்டப்படுவதை பார்த்தனர்.

ஆனால் சீன அரசு செய்தி நிறுவனங்கள் இதை குறித்து எவ்வித செய்தியையும் வெளியிடவில்லை, மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் செயற்கைக்கோள் மூலம் பார்த்ததில் கப்பலில் மேல் தட்டு வரை கட்டுமானம் முடிந்திருந்தததையும், அது ஒரு விமானம் தாங்கி கப்பலுக்கான வடிவம் என்பதையும் முடிவு செய்தனர். சீனா இந்த கப்பல் கட்டும் வேலையை தனது டைலான் கப்பல் கட்டும் தளத்தில் மேற்கொண்டு வருகிறது.

டைலானில் தான் சீனாவின் மிகப் பெரிய வணிக கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதனால் ராணுவ பார்வையாளர்கள் அதன் மீது அதிக கவனம் கொள்ளவது கிடையாது, ஆனால் சீனாவின் விமானம் தாங்கி கப்பலான லியோனிங் டைலான் துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டிருந்ததைக் அறிந்து சந்தேகமடைந்த ஜேன்ஸ் செய்தி நிறுவனம் தான் செயற்கைக்கோள் படங்கள் மூலம் சீனா லியோனிங் கப்பலின் அச்சு அசலாக மற்றொரு கப்பலைக் கட்டி வருவதை கண்டு பிடித்தது.

இதுவரை இது குறித்து எதுவும் பேசாத சீனா, தற்போது வாய் திறந்துள்ளது, சீனாவின் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில் சீனா தனது இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி வருவதாகவும் அதை மிக சீக்கிரமே படையில் இணைக்கப் போவதாகவும் கூறினார், மேலும் இது சுமார் 50,000 டன் எடை இருக்கும் என்றும் இந்த கப்பலிலிருந்து J  15 விமானங்களை ஏவ முடியும் என்றும் கூறினார்.

இந்தியாவும் தற்போது சுமார் 35,000 டன் எடையுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி கொச்சியில் கட்டி வருகிறது, சோதனைகளை முடித்து வரும் 2018-இல் கப்பல் படையில் சேர்க்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது