மருத்துவ தேவைகளுக்காக EC 135 ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா

மருத்துவ தேவைகளுக்காக EC 135 ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா

இந்தியாவின் தனியார் விமான நிறுவனமான Aviators பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அவசர மருத்துவ உதவிகளுக்காக ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட EC 135 என்னும் ஹெலிகாப்டரை வாங்குகிறது, முதல் கட்டமாக சுமார் எட்டு ஹெலிகாப்டர்களை இந்த வருட துவக்கத்தில் வாங்க கையெழுத்திட்டிருந்தது , அவற்றில் சில ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்டு விட்டது, அவை பெங்களூர் நகரில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சேவையை இந்தியா முழுவதும் பரப்ப பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட Aviators நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதற்காக மேலும் சுமார் 50 ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தில் வரும் நாட்களில் கையெழுத்திடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது, இதனால் தனியார் மருத்துவ சேவைகளுக்கான போக்குவரத்துக்கு நேரத்தை குறைக்க முடியும் என்று Aviators அதிகாரிகள் கூறினார்.

இதனால் தனியார் தேடுதல் சேவைகளுக்கும் அவசர கால தேடுதல் மற்றும் உதவிகளுக்கும் பெரிதும் பயன்படும் . இதனால் ஹெலிகாப்ட்டர் சேவைகளுக்கு ராணுவத்தின் உதவியை எதிர்பார்க்க வேண்டி வராது, உலகின் பல நாடுகள் இதே EC 135 ரக ஹெலிகாப்டர்களை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹெலிகாப்டர்களில் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் இருக்கும், மேலும் அதி வேகமாகவும் பறக்கும் ஆற்றல் கொண்டது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த ஹெலிகாப்ட்டர் சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும், சுமார் 20,000 அடி உயரம் வரை பார்க்கும் திறனும் கொண்டது. இதனால் சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.

இதை இயக்க ஒரு விமானி போதுமானது, இதனால் இரண்டு பிணியாளிகளையும் இரண்டு மருத்துவர்களையும் ஏற்றி செல்ல முடியும்.