இஸ்ரேலுடன் சேர்ந்து சுகோய் Su 30 MKI போர் விமானங்களை நவீனபடுத்த இந்தியா திட்டம்

இந்திய விமானப் படையின் முதுகெலும்பாக ரஷ்ய வடிவமைப்பான சுகோய் Su 30 செயல்பட்டு வருகிறது, சுமார் 200-க்கும் மேல் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பணியில் உள்ளது, மேலும் சுமார் 100 விமானங்களை தயாரிக்க HAL ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல் Su 30 விமானம் இந்திய விமானப் படையில் 2002-ம் வருடம் சேர்க்கப்பட்டது.  மற்ற ரஷ்ய பிளாங்கர் ரகங்களை விட இந்திய விமானங்கள் கொஞ்சம் மாறுபட்டவை. பல மின்னணு சாதனங்கள் பிரான்ஸ் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் இஸ்ரேல் நாட்டில் செய்யப்பட்டவை.

ரஷ்யா இதே விமானத்தை சீனாவிற்கும் கொடுத்துள்ளது, முதலில் சுமார் 60 விமானங்களை கொடுத்தது, பிறகு மீண்டும் 100 விமானங்களை கொடுத்தது. அதன் பின்பு சீனா அது போலவே விமானங்களை J 11 என்னும் பெயரில் திருட்டு தனமாக உற்பத்தி செய்து வருகிறது. அதில் சுமார் 250-க்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது, இருப்பினும் பிளாங்கர் ரகங்களிலேயே இந்தியாவிடம் தான் சிறந்த விமானம் உள்ளது.

இதன் வரிசையில் உள்ள எல்லா விமானங்களுமே ரஷ்யா தயாரித்த BARS NIIP ரக ராடர்களை பயன்படுத்துகிறது. இதனால் சீனாவிற்கு இந்திய விமானப்படையின் முதுகெலும்பான Su 30 விமானத்தைப் பற்றி அனைத்தும் தெரியும். எனவே அதன் ராடரை மாற்றி நவீன தலைமுறை GaN தொகுதிகள் அடங்கிய AESA ராடரை பொருத்த இந்தியா திட்டமிட்டிருந்தது. இருப்பினும் சூப்பர்சுகோய் நவீனப்படுத்தும் போது ரஷ்யாவின் நவீன பைல்க்கா AESA ராடர்களை சேர்க்க திட்டமிட்டிருந்தது.

ஆனால் இஸ்ரேல் அரசு இந்தியாவுடன் சேர்ந்து நவீன GaN  தொகுதிகள் அடங்கிய AESA   ராடார்களை தாயரிக்க திட்டம் போட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த செலவில் நவீன ராடர்களை தயாரிக்க முடியும். மேலும் இதை பல இந்திய போர் விமானங்களிலும் சேர்க்கலாம். இதை இஸ்ரேல் சீனாவிற்கு விற்கவும் செய்யாது. இதனால் ராடரின் ரகசியமும் பாதுகாக்கப்படும்.

எனவே இது குறித்து நல்ல முடிவை விமானப்படை சீக்கிரம் எடுக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்தனர். இந்தியாவின் ஜாகுவார், தேஜாஸ் போர் விமானங்கள், பறக்கும் விமான கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் A 50, Tu 142 கடலோர ரோந்து விமானம் இவை அனைத்துமே இஸ்ரேலிய ராடர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் AESA  ராடர் தேவை 2025-ம் ஆண்டு வாக்கில் சுமார் 1000-மாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது