அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்தது இந்தியா

இந்தியா அரிஹந்த் என்னும் பெயருடைய அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தி வருகிறது, இது முற்றிலுமாக உள்நாட்டிலேயே செய்யப்பட்டது ஆகும். இவ்வகை நீர்மூழ்கி கப்பல்கள் மற்ற நீர்மூழ்கி கப்பல்களையோ அல்லது போர் கப்பல்களையோ தாக்க வடிவமைக்கப்பட்டவை அல்ல. இவை விசேஷமாக அணு ஆயுத ஏவுகணைகளை கடலுக்கடியிலிருந்து ஏவ தயாரிக்கப்பட்டது.  இவ்வகை நீர்மூழ்கி கப்பல்களை ஒரு சில நாடுகளே வைத்துள்ளது.

இந்த கப்பலால் கடலின் அடி ஆழத்தில் சுமார் 90 நாட்களுக்கு எவ்வித அசைவும் இன்றி இருக்க முடியும். கப்பலின் இருப்பிடம் பற்றி முக்கிய அதிகாரிகளுக்கு கூட தெரிவிக்கப்பட மாட்டாது. இந்தயாவில் எதிரிகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தி நாட்டின் அனைத்து பாதுகாப்பு முறைகளையும் செயலிழக்க வைத்து விட்டாலும், இந்த அரிஹந்த் மாற்றும் அதிலுள்ள ஏவுகணைகள் எதிரி நாட்டை அணு ஆயுத ஏவுகணைகள் வீசி அழித்து விடும்.

இந்த கப்பல் ஏற்கனவே பல கடல் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது, ஆனால் இதுவரை ஏவுகணைகளை வீசி சோதனை செய்து பார்த்தது இல்லை. தற்போதைய சோதனையும் வெறும் டம்மி சோதனை தான், இந்த சோதனையில் ஏவுகணையை எவ்வாறு கடலுக்கடியில் உள்ள கப்பலில் இருந்து வீசுவது என்பதை DRDO அதிகாரிகள் பார்ப்பார்கள். தற்போதைய சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், அடுத்ததாக ஒரு உண்மையான ஏவுகணையை வீசப் போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் சுமார் 4 தொலை தூர ஏவுகணைகளையோ ( 3500km )  , அல்லது 12 குறுகிய தூர ஏவுகணைகளையோ ( 700 km ) வீசவல்லது,   ஆனால் அதிகாரிகள் தெரிவிக்கையில் இந்த கப்பலை பல்வேறு சோதனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் போவதாகவும், உண்மையான படையில் சேர்க்கப்படும் அரிஹந்த் கப்பலில் அடுத்த வடிவமான அரிந்த்மான் இதை விட இருமடங்கு சக்தி உடையது எனவும் குறிப்பிட்டுள்ளனர், கடைசியாக கிடைத்த தகவலின் படி  அரிந்த்மான் நீர்மூழ்கி கப்பலும் தற்போது கடல் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இந்த கப்பலின் ஆபத்தான தன்மை மற்றும் முக்கியத்துவம் கருதி இதன் பெரும்பாலான தகவல்கள் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.