குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டே பங்கேற்பு

அடுத்த குடியரசு தின விழாவில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் ஹோலாண்டேசிற்பப்பு விருந்தினராக பங்கேற்பார் என்றும், பின்பு முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அரசு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கியமாக ரபேல் போர் விமான ஒப்பந்தமும் இந்திய ரயில்வே-க்கு எஞ்சின் வாங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அதிபரை சிறப்பு விருந்தினராக அழைப்பதன் மூலம் இந்தியா மெதுவாக மேற்குலகம் பக்கம் சாய்வதையே சுட்டிக் காட்டுவதாக ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது முக்கியமாக சீனாவிற்கு எதிராக இந்தியா மேற்கு, கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் நட்பை விரிவு படுத்தவும், ஐ.நா அவையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெறவும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று  கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாடு இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க பாகிஸ்தானின் உறவை மெதுவாக  கைவிட ஆரம்பித்துள்ளது, மேலும் பாகிஸ்தான் நாட்டில் இனி முதலீடோ அல்லது அந்த நாட்டு ராணுவத்திற்கு உதவிகளோ வழங்காது என்றும் பிரான்ஸ் நாட்டு ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாடு ஐரோப்பிய கூட்டமைப்பில் சக்திவாய்ந்த ஒரு நாடு ஆகும். அதனுடன் கூட்டு சேர்வது வருங்கால இந்தியாவிற்கு வளமாக இருக்கும் என்றும் உலக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் காலதாமதமாகப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்து அதிபர் ஹோலாண்டே முன்னிலையில் கையெழுத்திடும் என்றும், இதன் மூலம் இந்தியாவின் விமானப் படை அதி நவீன போர் விமானங்களை பெறும், இந்த விமானங்கள் பல்வகை தாக்குதலை மேற்கொள்ளும் நவீன விமானங்கள் ஆகும், ரஷ்யாவின் போர் விமானங்களை விட நம்பகத்தன்மை அதிகம் மிக்க விமானங்கள்  என்றும் ராணுவ பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்திய ரயில்வே-க்கு சுமார் 24,000 கோடி ருபாய் மதிப்பில் 800 ரயில் என்ஜின்களை வழங்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கன ரக எஞ்சின்கள் மூலம் பயணிகள் ரயிலின் வேகத்தையும் பெட்டிகளின் எண்ணிகையும் அதிகரிக்க முடியும்.