3000 கோடி செலவில் ஆளில்லா விமானங்களுக்கான என்ஜின்களை உருவாக்க DRDO-விற்கு அனுமதி

மத்திய அரசு பாதுகாப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் கோரிக்கையான எஞ்சின் தயாரிக்கும் பணிக்காக சுமார் 3000 கோடி ரூபாவை ஒதுக்க உள்ளது, கட்டக் என்னும் பெயரில் இந்த எஞ்சின் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது DRDO-வின் துணை நிறுவனமான GRTE . இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் எஞ்சின்கள் இந்தியாவில் செய்யப்படும் ஆளில்லா உளவு விமானங்களில் பயன்படுத்தப்படும்.

GRTE  இதற்கு முன்பு காவேரி என்னும் பெயரில் எஞ்சின் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது. அந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. புதிய கட்டக் எஞ்சினின் அடிப்படை பழைய காவேரி என்ஜினை ஒத்தே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த எஞ்சின் மூலம் தான் இந்தியாவில் தயாரிக்கும் அடுத்த தலைமுறை ஆளில்லா தாக்கும் உளவு விமானம் இயக்கப்படும் என்றும், எதிரி விமானங்களை அழிக்கவும் தரையில் உள்ள இலக்குகளை குண்டுகள் மூலம் அழிக்கவும், விமானத்திற்கு தேவையான முழு சக்தியையும் புதிய எஞ்சின்  கொடுக்குமாறும் வடிவமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த விமானத்திற்கு Aura- Autonomous unmanned research Vehicle  என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காவேரி எஞ்சின் இந்தியாவின் தேஜாஸ் இலகு ரக விமானத்திற்காக வடிவமைக்கப்பட்டது, அது தோல்வியில் முடிந்ததால் அமெரிக்காவின் GE  நிறுவனம் தயாரித்த F 414 எஞ்சின் மூலமாகவே தேஜாஸ் விமானம் செயல்படுகிறது, தோல்வியடைந்த காவேரி என்ஜினை சிறிது மாற்றங்கள் செய்து அதை கட்டக் என்னும் பெயரில் ஆளில்லா உளவு விமானத்தில் பொருத்துவார்கள்.

மேலும் இதன் திட்ட நேரம் குறித்தோ, இறுதி வடிவம் குறித்தோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை, இருப்பினும் இந்த என்ஜினை உருவாக்க குறைந்தது மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை ஆகலாம்.