தேஜாஸ் மார்க் 1 விமானத்தின் பிரச்சனைகள்

குறைந்த செயல் திறன், பராமரிப்பு பிரச்னை ஆகிய குறைகள் களையப்பட்டு தேஜாஸ் மார்க் 2 வடிவமைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

பாராளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக சமர்பிக்கப் பட்ட அறிக்கையில் கடந்த 2009ஂ ஆண்டே மார்க் 2 தேஜாஸ் தயாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணி செய்ய ஒப்புதல் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தேஜாஸ் மார்க் 1-ல் காணப்பட்ட குறைகள்.

விமானத்தில் உள்ளேயே ஜாமர் கருவிகள் இல்லாததால் விமானத்தால் பல சூழ்நிலைகளில் சண்டையிட முடியாது.

குறைவான செயல் திறன்

பராமரிப்பில் உள்ள பிரச்சனைகள்

இது போன்ற பற்றாக் குறை ஏற்பட்டதற்கான காரணம்

விமானத்தின் உட்புறம் பொருத்தக் கூடிய ஜாமர் கருவிகள் தேஜாஸ் விமானத்தை உருவாக்கும் நேரத்தில் மிகப் பெரியதாக இருந்ததால், விமானத்தில் பொருத்த போதிய இடம் இல்லை.

பராமரிப்பு பிரச்சனைகளை இந்திய விமானப் படை எழுப்பிய போது சரியான தீர்வை HAL மற்றும் ADA வழங்கவில்லை, இருப்பினும் பல குறைகள் பின்னர் களையப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.