தேஜஸ் போர் விமானத்தின் இறுதி செயல்பாட்டு அனுமதிக்கு இன்னும் ஒரு வருடம் கூட தேவைப்படும்.

போர் விமானம் படையில் சேர அதற்கு பல நிபந்தனைகள் வைக்கப் பட்டு அதி எல்லாம் வெற்றி பெற்றால் மட்டுமே படையில் சேர்த்துக் கொள்ளப்படும் ஏற்கனவே பல சுற்று தேர்வுகளுக்கு பின் கடந்த வருடம் தேஜாஸ் விமானம் முதல் செயல்பாட்டு மைல் கல்லை தாண்டியது, ஆனாலும் முழுவதுமாக படையில் சேர்க்க அது இறுதி செயல்பாட்டு தேர்வுகளையும் தாண்ட வேண்டும்,

இதை இந்த வருட மத்தியில் தேஜாஸ் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப் பட்டது, பின்னர் அது இந்த வருட கடைசிக்கு நீட்டிக்கப்பட்டது, தற்போது அது அடுத்த வருட மத்திக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைக்க, தேஜாஸ் விமானம் ராடாரின் உதவியுடன் அதிக தூர தனது பார்வைக்கு அப்பால் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்க வேண்டும். ஆனால் இதுவரை ஏவுகணையை இணைக்கும் வேலை மட்டும் தான் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

தேஜாஸ் ஏற்கனவே தனது பார்வைக்கு அருகில் உள்ள இலக்கை தலைகவச பார்வை உதவியுடன் தாக்கி அழித்தது, மேலும் தனது துப்பாக்கியை தலத்தில் வைத்து சோதனையும் செய்தது, கூடவே தரையில் தனது என்ஜின்-ய் தயார் நிலையில் வைத்து எரிபொருளும் நிரப்பிக் கொண்டது.

தரையில் செய்த இவை அனைத்தையும் வானில் பறக்கும் போது செய்தால் மட்டுமே இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைக்கும்.