குறைபாடுகளுக்கு மத்தியில் தேஜாஸ் மார்க் 1 A விமானத்தை படையில் சேர்க்க திட்டம்

 

சுமார் 7 ஸ்குவார்டன், அதாவது 140 சற்று மேம்படுத்தப்பட்ட AESA ரேடாருடன் கூடிய தேஜாஸ் மார்க் 1 A விமானத்தை விமானப் படையில் சேர்க்க பாதுகாப்புத் துறை முடிவெடுத்துள்ளது, மேலும் கூறுகையில் விமானப் படை தற்போது குறைந்த அளவே விமானங்களைக் கொண்டுள்ளது, அதை சரிகட்டும் விதமாக இந்த மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் விமானத்தை படையில் சேர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறியது, அதே நேரத்தில் தேஜாஸ் மார்க் II விமானம் வடிவமைக்கும் மற்றும் தயாரிக்கும் காலத்தை சுமார் இரு ஆண்டுகளுக்கு அதாவது 2024-க்கு தள்ளி வைத்துள்ளது.

தற்போது ஒவ்வொரு வருடமும் இந்த விமானப் படை பழைய விமானங்களை செயல்பாட்டிலிருந்து நீக்கி வருகிறது, ஒவ்வொரு வருடமும் சுமார் 3 ஸ்குவார்டன் அதாவது சுமார் 50-க்கும் மேல் விமானங்கள் படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது, இதில் இரு ஸ்குவார்டன் MiG 21 விமானமும் ஒரு ஸ்குவார்டன் MiG 27 விமானமும் அடங்கும், 2022-க்குள் அனைத்து பழைய விமானங்களும் படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை சரி கட்டும் விதமாக முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டிலிருந்து சுமார் 36 விமானங்களும், மீதி இந்திய தயாரிப்பான தேஜாஸ் மார்க் 1 மற்றும் மார்க் 1 A விமானத்தை படையில் சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, முதல் தொகுதியாக சுமார் 40 தேஜஸ் மார்க் 1 விமானத்தை வரும் 2019-க்குள் முடிக்கவும், அதைத் தொடர்ந்து மார்க் 1 A விமான கட்டுமானத்தை தொடங்கவும் HAL திட்டமிட்டுள்ளது,

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பும், HAL-ம் மேம்படுத்தப்பட்ட இந்த விமானம் அதிக திறனும், அதிக தாக்கும் ஆற்றலும் கொண்டதாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ளது, மேலும் பழைய மார்க் 1 விமானத்தை விட இந்த விமானம் சுமார் 1000 கிலோ வரை எடை குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர், மேலும் இஸ்ரேல் நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ள புதிய ரேடார் இதன் தாக்கும் மற்றும் கண்காணிக்கும் சக்தியையும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்