மார்க் 1 A விமானத்தை வாங்க விமானப்படைக்கு HAL பரிந்துரை

மார்க் 2 ரக விமானம் தயாரிக்க அதிக காலம் ஆகும் என்பதால் மேம்படுத்தப்பட்ட மார்க் 1 A ரக தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தை வாங்குமாறு விமானப் படைக்கு HAL பரிந்துரை செய்துள்ளது.
HAL- டம் போதிய வேலையாட்கள் இல்லாத காரணத்தால் மார்க் 2 ரக விமானம் தயாரிக்க இன்னும் பல காலம் பிடிக்கும் என்றும், அதுவரை சிறிது மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 A விமானத்தை வாங்குமாறும் விமானப் படைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் அது கூறுகையில், பொறியியலாளர்கள் அனைவருமே பழைய திட்டங்களான தேஜாஸ் Mark 1 விமானம் உற்பத்தி செய்யும் பகுதிகள், அடிப்படை பயிற்சி விமான திட்டமான HTT 40, மற்றும் நடுத்தர பயிற்சி விமான திட்டமான சிதாராவிலேயே முழுமையாக ஈடுபட்டுள்ளனர்,

HAL கூறும்போது, மார்க் 2 ரக விமானத்திற்காக காத்திருப்பதை விட விமானப்படை 80 மார்க் 1 A ரக தேஜாஸ் விமானத்தை வாங்கலாம் என்றும், இது அடிப்படை மார்க் 1 ரக விமானத்தை விட நவீனமானதும், வருங்காலத்தில் தயாரிக்கும் மார்க் 2-ஐ விட சிறிது திறன் குறைந்ததாகவும் இருக்கும்.

விமானப் படை ஏற்கனவே 40 மார்க் 1 ரக விமானத்தை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது, மேலும் 80 முதல் 100 மார்க் 2 ரக விமானத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது,

HAL-ல்லின் திட்டப்படி, விமான தயாரிப்பு நிலையம் மார்ச் 2016 க்குள் நான்கு விமானமும், அடுத்த மார்ச் 2017 க்குள் எட்டு விமானமும், அடுத்த 2018, மற்றும் 2019 -ல் தலா 16 விமானங்கள் தயாரிக்கும்,

மேலும் மார்க் 2 விமானத்தின் சோதனை திட்டங்கள் முடிய 2022 முதல் 2025 வரை ஆகலாம், எனவே அதுவரை இந்த தயாரிப்பு நிலையம், அதாவது 2019 முதல் மார்க் 2 தயாராகும் வரை வேலை இல்லாமல் தான் இருக்கும், எனவே அந்த கால கட்டத்தில் விமானப்படை மேம்படுத்தப்பட்ட மார்க் 1 A விமானங்கள் 80- ஐ உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டால், விமான தயாரிப்பு நிலையம் தொடர்ந்து செயல்படும்,

மார்க் 1 A விமானம் பழைய மார்க் 1-ஐ விட வேகமானதும் அதீத திறனுடையதும் ஆகும், பழைய விமானத்தில் தேவை இல்லாத அல்லது பழைய பாகங்களை அகற்றிவிட்டு புதிய அதி நவீன உபகரணங்களை சேர்ப்பதன் மூலம் சுமார் 800 கிலோ வரை விமானத்தின் எடையைக் குறைக்கவும் முடியும்,

HAL-ல்லில் இந்த விமானத் தயாரிப்பு வரிசையை அமைக்க சுமார் 1600 கோடி செலவானது, இதில் ஒரு பாதியை HAL-ல்லும், மறு பாதியை விமானப்படையும் கப்பல் படையும் அளித்துள்ளன, எனவே இந்த விமானத் தயாரிப்பு வரிசையை தக்க வைத்துக் கொள்ளவும், பணியாளர்களை மேலும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கவும் அதிக ஆர்டர்கள் தேவை என்று HAL கூறியுள்ளது,

மேலும் விமானப்படை 40 மார்க் 1 ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது, இவை அனைத்தையும் 2019-க்குள் கொடுத்து விட வேண்டும், ஆனால் HAL இதுவரை ஒரே ஒரு விமானத்தை மட்டுமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.