மேலும் பல தடைகளை சந்திக்கப் போகும் ரபேல் ஒப்பந்தம்

இந்திய மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் ஒப்பந்தத்தை நிறைவு செய்ய மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர், இருப்பினும் இதில் பல தடைகள் இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர், பல தகவல்களின் படி இந்த ஒப்பந்தம் இறுதி செய்ய இன்னும் பல காலம் பிடிக்கும் என்றும், ஒப்பந்தத்தின் வடிவம் கூட இன்னும் தயாராகவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் கூறினார்கள். இரு தரப்பு விவாதங்களுக்கிடையே பல வித்தியாசங்கள் இருப்பதாகவும், இது ஒப்பந்தத்தை குழப்பும் விதமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினார்.

இந்திய அரசு பல இந்திய நிறுவனங்களை இந்த ஒப்பந்தத்தில் சேர்த்து அவற்றின் சில உதவிகளை இதில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகவும், அதை பிரான்ஸ் கடுமையாக எதிர்ப்பதாகவும், இதனாலேயே ஒப்பந்தம் நகராமல் அப்படியே இருப்பதாகவும் பிரான்ஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது,

மேலும் ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை போக்கி ஒப்பந்தத்தை துரிதப்படுத்த பிரான்ஸ் நாட்டிலிருந்து மூத்த அதிகாரிகள் டெல்லி வந்துள்ளனர், மேலும் அவர்கள் இந்திய அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுகளையும் நடத்தியுள்ளனர்,

ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இதுவரை பல காரணங்களால் கையெழுத்தாகாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இதில் சில தனியார் நிறுவனங்களை சேர்க்க முயற்சிப்பதும், அவற்றிற்கு எந்த வகையில் பணிகளை கொடுக்க முடியும் என்றும் பிரான்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது, மேலும் விலை பேரமும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

மேலும் எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்ஸ் தரப்பு ஒப்பந்தத்தில் பாதியளவு பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறுகிறது,