ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இறுதி செய்ய இன்னும் ஒரு மாதம் ஆகும், பாதுகாப்புத்துறை

இந்த விமானப் படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்ததிற்கான பேச்சுவார்த்தை பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன,

இரு நாட்டு பிரதிநிதிகளும் பரபரப்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், இரு நாடுகளும் தங்கள் உறுதிமொழிகளை எழுத்து வடிவில் தயாரித்து வருவதாகவும், இதற்கு சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

இந்தியா பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தத்தில் சுமார் 50 சதவீத பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய நிர்பந்தித்து வருகிறது, ஆனால் பிரான்ஸ் 30 சதவீதம் தான் முடியும் என்று கூறி வருகிறது, மேலும் இந்தியாவின் ஆயுதங்களை ரபேல் விமானத்தில் பொருத்த இந்தியா கேட்டிருந்தது, ஆனால் இதற்கு கூடுதல் செலவாகும் என்றும் பிரான்ஸ் தரப்பு கூறிவருகிறது, நீண்ட காலமாக நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் உள்ளதாக தெரியவில்லை,

இந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில், ரபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒரு சில காரணங்களுக்காக மீண்டும் ஒத்திப் போடப்பட்டது