மேலும் காலதாமதமாகும் ரபேல் விமான ஒப்பந்தம்

இந்தியா சுமார் 36 ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்குவதாக பிரதமர் முன்பு அறிவித்தார், இருப்பினும் பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்து ஆகவில்லை, சமீபத்தில் தான் பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி இதை வாங்க ஒப்பந்தம் தயாரிக்கும் அதிகாரிகளை துரிதப்படுத்தியது,

பிரெஞ்சு தூதரகம் வெளியிட்ட செய்தியில் இந்த ஒப்பந்தத்தில் நிறைய குளறுபடிகள் இருப்பதாகவும், அது எப்போது களையப்பட்டு இறுதி ஒப்பந்தம் தயாராகும் என்று சரியாக கணிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

இந்த மாத தொடக்கத்தில் பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருவார் என்றும் அப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த குளறுபடிகள் காரணமாக அவர் இந்தியா வருவதையும் தவிர்த்து விட்டார்.

இதன் முக்கிய காரணமாக, ஒப்பந்த பணத்தின் ஒரு பகுதியை இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படாததே காரணம் என்றும் தெரிகிறது, இந்தியா 50% பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யக் கேட்டது ஆனால் பிரான்ஸ் 30% தான் முடியும் என்றும் கூறி வருகிறது.