இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பிரான்ஸ்

இந்திய விமானப்படை பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானங்கள் 36 ய் வாங்க திட்டமிட்டுள்ளது, மேலும் அதன் ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை, இந்தியா இதில் முக்கியமாக இரண்டு விஷயங்களைப் பற்றி அதிகமாக விவாதித்தது, ஒன்று ஒப்பந்த பணத்தில் பாதியை இந்தியாவில் முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது, மற்றொன்று இந்திய பாதுகாப்பு நிறுவனம் தயாரித்த அஸ்த்ரா விமான எதிர்ப்பு ஏவுகணையை பிரான்ஸ் நாடு வழங்கும் விமானத்திலும் சேர்க்க நிர்ப்பந்தித்தது,

இருப்பினும் இந்தியாவில் சுமார் 30 % அளவு ஒப்பந்த பணத்தை ரபேல் விமானத்தை தயாரிக்கும் டிஅசால்ட் மற்றும் இதர நிறுவனங்களும் முதலீடு செய்ய ஒத்துக் கொண்டன, இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இரண்டாவது ஏவுகணையை சேர்ப்பது,

ஒரு புதிய ஏவுகணையை சேர்க்க விமானத்தின் அடிப்படை கணிப்பொறி அமைப்பில் மாறுதல்கள் செய்ய வேண்டும், மேலும் விமானத்திலும் பல மாறுதல்கள் செய்ய வேண்டும், எனவே இதற்கு கூடுதல் செலவாகும் என்று டிஅசால்ட் அறிவித்தது, ஆனால் அதிக பணம் இதற்கு தர முடியாது என்று இந்திய அதிகாரிகள் மறுத்து விட்டனர், எனவே இந்திய ஏவுகணையை விமானத்தில் சேர்க்க முடியாது என்று டிஅசால்ட் நிறுவனம் மறுத்து விட்டது.

ஏற்கனவே இந்திய விமானப் படையில் குறைந்த அளவே விமானங்கள் இருக்கின்றது, அதுவும் மிக பழைய விமானங்களே அதிகம் உள்ளது, எனிவே அவற்றை மாற்ற இந்திய விமானப் படை பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது, ஆனால் அரசு சரியான ஆர்வம் காட்டாததினால் இந்த திட்டங்கள் நீண்ட காலமாக கிடப்பிலே உள்ளது.