ஒரு ரபேல் விமானம் 800 கோடி

இந்திய விமானப்படை, அரசின் மெத்தனப் போக்கை மென்மையாக சாடி வருகிறது, இந்திய விமானப் படைக்கு 126 அதி நவீன நடுத்தர பல் திறன் கொண்ட விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டு ரபேல் விமானத்தை வாங்க முடிவு செய்தது, இருப்பினும் பல பிரச்சனைகள் காரணமாக இந்திய அரசு வெறும் 36 விமானங்களையே நேரடியாக கொள்முதல் செய்வதாக இந்திய பிரதமர் பாரிஸ் நகரில் அறிவித்தார்.

அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை பிரான்ஸ் அரசுடன் கொள்முதல் குறித்த இறுதி ஒப்பந்த அறிக்கையை இதுவரை இந்திய அரசு அதிகாரிகள் வழங்கவில்லை, வெறும் பேச்சு வார்த்தைகளும் சாதாரண பரிமாற்றங்களையுமே செய்து வருவதாக விமானப்படை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ஒரு விமானத்தின் மதிப்பு அதன் ஏவுகணைகள் கூடுதல் எஞ்சின்கள் மற்றும் உதவிகள் அமைப்பு ஆகிய மொத்தம் சேர்த்து 800 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, 36 விமானங்களும் கூடுதல் உதிரி பாகங்களும் சேர்த்து சுமார் 28,000 கோடி வரை ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமானப் படையில் விமானங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், பழைய விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்கள் சேர்க்கப்படாததும் , இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜாஸ் விமானம் செயல்பட ஏற்படும் காலதாமதம் , ஆகியவை இந்திய விமானப் படையின் திறனை வெகுவாக பாதித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முன்னணி விமானமான Su 30 MKI செய்ய ஆகும் செலவு சுமார் 450 கோடி ஆகும். உதிரி பாகங்கள் மற்றும் ஏவுகணைகள் தவிர்த்து.