ரபேல் போர் விமான ஒப்பந்தம்

இரு மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் பிரான்ஸ் சென்றிருந்த போது, பிரான்ஸ் நாட்டின் அதி நவீன போர் விமானமான ரபேல் -ய் இந்தியா வாங்கப் போவதாக அறிவித்தார், சுமார் 36 விமானங்கள் வாங்கப்படும் என்றும் இவை இந்திய விமானப் படையில் உடனடியாக சேர்க்கப்படும் என்றும் அறிவித்தார்.

இது குறித்து பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர்

இந்திய விமானப் படையின் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் விதிமுறை மற்றும் நிபந்தனைகள் குறித்து கூடிப் பேசி முடிவெடுத்து விட்டதாகவும், அந்த அறிக்கையை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டு, பிறகு ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தமாக 36 விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டது, அதுவும் மாதங்கள் பல ஆகியும் இன்னும் கையெழுத்து ஆகாதது ஆச்சரியமூட்டுகிறது