இந்திய விமானப்படை விமானிகளை T 50 விமானத்தில் பறக்க ரஷ்யாவிடம் அனுமதி கேட்டுள்ளது இந்தியா

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5-ம் தலை முறை போர் விமானமான T 50-யில் இந்திய விமானப்படை விமானிகளை பறக்க வைக்க இந்திய அரசு ரஷ்ய அரசை கேட்டுக் கொண்டுள்ளது, இந்தியா சுமார் 60-க்கு மேல் T 50 விமானங்களையும், பிறகு சுமார் 100-க்கும் மேல் மேம்படுத்தப்பட்ட T 50 விமானங்களை FGFA என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளது, இதன் முதல் கட்டமாக இந்திய விமானப்படை விமானிகளை T 50 விமானத்தில் பறக்க வைக்கவும் அதன் திறனை ஆராய்ந்து பார்க்கவும் ரஷ்யாவிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

FGFA விமானத்தை வடிவமைக்க சுமார் 3 T 50 விமானகளை ரஷ்ய நாட்டிடம் ஏற்கனவே இந்தியா கேட்டிருந்தது, இதற்கான முதல் கட்ட ஒப்பந்தம் 2007-லும், இரண்டாம் கட்டமாக 2010-இல் ஒப்பந்தத்துடன் சுமார் $300 மில்லியன்கள் வடிவமைப்பிற்கும் வழங்கியது. முதலில் சுமார் 250 விமானத்திற்கும் மேல் வாங்க திட்டமிடப்பட்டிருந்தது, இருப்பினும் பல்வேறு சூழ்நிலைகளால் அது 50 முதல் 60 Su T 50 விமானங்களாகவும் சுமார் 125 மேம்படுத்தப்பட்ட FGFA விமானங்களாகவும் குறைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் $25 பில்லியன்களுக்கும் மேல்.

ஆனால் பல சூழ்நிலைகளால் இறுதி ஒப்பந்தம் இழுபறி நிலையிலேயே காணப்படுகிறது, இந்த ஒப்பந்தத்தை முறையாக ஆரம்பிக்க ரஷ்ய அரசுடன் ஆராய்ச்சி மாற்றும் மேம்பாட்டு ஒப்பந்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும், அதனுடன் சுமார் $6 பில்லியன் பணமும் ரஷ்யாவிற்கு வழங்க வேண்டும், அதன் பிறகே T 50 விமானத்தை ஆராயவும், அதை மேம்படுத்தி இந்தியாவில் தயாரிக்கவும் ரஷ்யா அனுமதி வழங்கும், ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் காலம் பிடிக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன,

விமானத்தை ஓரளவு பரிசோதித்து, அதில் தன்னிறைவு பெற்றால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய அரசு முடிவு செய்துள்ளது, ஏற்கனவே DRDO மற்றும் HAL அதிகாரிகளுக்கு விமானத்தின் செயல்பாடு மற்றும் தகவல்கள் அளிக்கப்பட்டது, இருப்பினும் விமானப்படை விமானிகள் பறந்து அதன் செயல்பாட்டை பார்த்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே இந்தியா மேற்கொண்டு தனது பங்களிப்பை கொடுக்க முடிவு செய்துள்ளது,

வரும் நவம்பர் மாதம் இந்தியா பிரதமர் ரஷ்யா செல்லும் போது இதற்கான வேண்டுகோளை முறைப்படி ரஷ்ய அதிகாரிகளிடம் தெரிவிப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.