இந்தியா ரஷ்யா 5-ம் தலைமுறை போர் விமானம் Su T 50 – FGFA

5-ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க துவக்க நிலை வடிவமைப்பிற்கு இதுவரை சுமார் 2500 கோடி ருபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டிசம்பர் 2010 -ம் வருடம் ரஷ்யாவுடன் செய்து கொண்ட இந்த துவக்க நிலை வடிவமைப்பு ஜூன் 2013 அன்று நிறைவு பெற்றதாகவும் கூறினார்,

இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு விமான நிறுவனமான HAL -ற்கு, பாதுகாப்பு மேம்பட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (DRDO), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (CSIR) மற்றும் பல்வேறு இந்திய நிறுவனங்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார்.

இதன் அடுத்த கட்ட நோக்கம் ரஷ்யாவுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது ஆகும், அதுவும் இந்த வருட இறுதிக்குள் கையெழுத்து ஆகிவிடும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான முதல் 94 மாதங்களிலிருந்து இந்திய விமானப் படைக்கு  5-ம் தலை முறை போர் விமானங்கள் சப்ளை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.