5 நாள் பயணமாக சீனா செல்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசு முறை பயணமாக சீனாவிற்கு வரும் நவம்பர் 19 முதல் பயணம் மேற்கொள்ளவுள்ளார், இந்த பயணத்தின் போது எல்லைப் பிரச்னை, தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து சீன நாட்டு அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

இந்த பயணத்தின் போது வட இந்தியாவில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்யும் சீனாவின் போக்கை கண்டிக்கவும், அதை நிறுத்தவும் உள்துறை அமைச்சர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக சீனாவிற்கு செல்லும் ராஜ்நாத் சிங் முதலில் அங்கு சென்று சீன உள்விவகாரங்களுக்கான அரசு அதிகாரிகளை சந்திப்பார் என்றும், எல்லைப் பிரச்சனையை முக்கியமாக முன்வைப்பார் என்றும் அரசு செய்திகள் கூறுகின்றன. மேலும் பரஸ்பர ஒப்பந்தகளை சீனா பின்பற்றாதததையும், சரியான நேரங்களில் கொடி அமர்வுக்கு சீனா வராததையும், அதன் அவசியத்தையும் சீனாவிடம் தெரிவிப்பார் என்றும் அந்த செய்திகள் தெரிவிகின்றன.

மேலும் சீனாவின் ஷாங்காய் நகருக்கும் உள்துறை அமைச்சர் செல்லவுள்ளார், அங்கு நடக்கும் கூட்டத்தில் உலக தீவிரவாதத்தை எதிர் கொள்ளும் முக்கியத்துவத்தையும், இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, சீனாவின் உய்கூர் இஸ்லாமிய தீவிரவாதமும், இந்தியாவின் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதமும் ஓன்று எனவும் இரண்டையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது

ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் உள்நாட்டுப் பாதுகாப்பிலும் ராணுவத்திலும் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்