6000 கோடி செலவில் 48 புதிய ஹெலிகாப்டர்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது இந்தியா.

சுமார் $1.1 பில்லியன் டாலர் மதிப்பில் சுமார் 48 புதிய Mi 17 v 5 நடுத்தர ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படை வாங்கவுள்ளது.

இந்திய விமானப் படையில் ஏற்கனவே இதே வகை ஹெலிகாப்டர்கள் சுமார் 139 செயல்பாட்டில் உள்ளது, இது பொதுவாக வீரர்களை ஏற்றி செல்ல பயன்படும்,

இந்த வகை ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய Mi 8 ரக ஹெலிகாப்டர்களை பணியில் இருந்து விலக்கி கொள்ளும்,

இந்த வகை Mi 17 v 5 ரக ஹெலிகாப்டர்களில் தான் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்வார்கள்