முதல் முறையாக சவுதியில் இந்திய போர் விமானங்கள்

முதல் முறயாக இந்திய போர் விமானங்கள் சவூதி வான் வெளியில் பறந்தது மேலும் அங்கு அவைகள் ஆகஸ்ட் 1 முதல் நான்கு வரை சவுதியின் தையிப் நகரில் உள்ள விமான தளத்தில் முகாமிட்டிருக்கும் என்றும் இந்திய விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் இந்தியாவின் போர் விமானங்கள் மற்றும் உதவி விமானங்கள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற போர் பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தது, ஆனால் வரும் வழியில் சவூதி நாட்டில் மூன்று நாள் நின்று வருமாறு புதிய உத்தரவு போடப்பட்டிருந்தது,

இது இந்திய சவூதி ராணுவ உறவை மேலும் பலப் படுத்தும் என்று ராணுவ பார்வையாளர்கள் கருதுகின்றனர்.