விமானப்படை தளம் பானகா AFS Panagarh

இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட பான்கா விமான தளத்தை மறுபடியும் பயன்படுத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இந்த விமான தளம் கொல்கத்தா நகரிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மேற்கு வாங்க மாநிலத்தில் அமைந்துள்ள இந்த விமான தளம் வங்க தேசத்திற்கு மிக அருகில் உள்ளது, இந்த தளம் தற்போது ஆயுதங்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, விமான தேவைகளுக்கு பானகாவின் விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தது.

ஜூலை மாதத்திற்குள் மறு சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்று விமானப் படை அதிகாரிகள் முன்னமே தெரிவித்திருந்தனர், மேலும் இந்த விமானதளத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன C 130 J சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை நிறுத்தப் போவதாக விமானப் படை அதிகாரிகள் அறிவித்திருந்தனர், அதற்காக அமெரிக்க மற்றும் இந்திய பொறியாளர்கள் இந்த விமான நிலையத்தில் பல்வேறு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா ஏற்கனவே சுமார் ஆறு நவீன C 130 J ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது, மேலும் சுமார் ஆறு விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது, புதிதாக வாங்கவுள்ள ஆறு விமானங்களும் பான்கா விமான தளத்தில் நிறுத்தப் பட்டு பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்.

பான்கா விமான தாளின் ஓடுதளம் சுமார் 2700 மீட்டர் நீளம் கொண்டது, இதிலிருந்து C 130 J விமானங்களை எளிதாக வானில் ஏவ முடியும்,

மேலும் இந்த விமான தளத்தில் தான் புதியதாக உருவாகப் பட்ட ராணுவத்தின் 14 Corps படைப்பிரிவும் விரைவில் நிறுத்தப்படும், புதிய இந்த ராணுவத்தின் படைப்பிரிவில் சுமார் 80,000 வீரர்களும் அதிகாரிகளும் இருப்பார்கள்