இஸ்ரேல் மீது மீண்டும் ராக்கெட்டுகளை வீசியது பாலஸ்தீன்

இஸ்ரேல் மீது மீண்டும் ராக்கெட்டுகளை வீசியது பாலஸ்தீன்

இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள ஆஷ்கிலான் நகரின் மீது பாலஸ்தீன் தீவிரவாதிகள் காசா பகுதியிலிருந்து இரண்டு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர், இதில் ஒன்றை இஸ்ரேலின் ஐயன் டோம் ராக்கெட் தடுப்பு சாதனம் வானிலேயே அந்த ராக்கெட்டை தாக்கி அழித்தது, மற்றொன்று மக்கள் அதிகம் இல்லாத வெளியில் விழப் போவதை தெரிந்த ஐயன் டோம் அதை தாக்கவில்லை, அது செதடார்ட் பகுதியில் விழுந்தது அங்கிருந்த ஒரு வீடு மற்றும் ஒரு பேருந்து இதனால் சேதமடைந்தது, யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

திடீரென நடை பெற்ற இந்த ராக்கெட் தாக்குதலை அடுத்து, ராக்கெட் ஏவப் பட்ட இடைத்தை குறி வைத்து இஸ்ரேலிய விமானப் படையினர் இரவே தாக்குதல் நடத்தினர், மூன்று முறை இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி அந்த இடத்தை அழித்தனர், அதன் பிறகு இதுவரை அமைதி நிலவி வருகிறது,

இதற்கு பாலஸ்தீன் பகுதியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த சில தினங்களாகவே பாலஸ்தீனியர்கள் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர், சமீபத்தில் நடந்த பல கல்லெறி சம்பவங்களால் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் அதிக தூரம் குறி பார்த்து சுடும் ஸ்னைப்பர் துப்பாகிகளாலும் யூதர்களின் வீடுகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர், இதை அடுத்து இஸ்ரேலிய பிரதமர் கல்லெறி சம்பவங்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.