இந்தியா இங்கிலாந்து விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்திரா தனுஷ்

இந்திய நாட்டு விமானங்களும் இங்கிலாந்து நாட்டு விமானங்களும் புதிய போர் உத்திகளை மேற்கொள்வது தொடர்பான போர் பயிற்சியை இந்த மாத கடைசியில் ஆரம்பிக்க உள்ளனர்.

இதில் இந்தியா சார்பில் அதி நவீன Su 30 MKI ரக போர் விமானங்களும் IL 78 போன்ற வானிலே எரிபொருள் நிரப்பும் விமானங்களும் , இங்கிலாந்து சார்பில் அதி நவீன Typhoon விமானங்களும் பறக்கும் வான் கட்டுப்பாட்டு விமானங்களும் ஈடுபடுத்தப்பட உள்ளன.

மேலும் இந்தியாவின் விமானப் படையின் சிறப்புப் படையான Garud கமாண்டோ படைகள் இங்கிலாந்தின் சிறப்பு வான் படை பிரிவுடன் (SAS) பாதுகாப்பு பயிற்சியிலும் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளன,

இந்திய படைகளும் விமானங்களும் ஏற்கனவே இங்கிலாந்திற்கு சென்று விட்டன,

இதற்கு முன்னரும் இந்திய படைகளும் இங்கிலாந்து படைகளும் இந்திரா தனுஷ் என்ற பெயரில் கூட்டுப் பயிற்சி  செய்துள்ளது குறிப்பிடதக்கது