இடைநிலை பயிற்சி விமானம் IJT Sitara சுழல் சோதனைக்கு தயார்

விமானப்படையின் இரண்டாம் நிலை பயிற்சி விமானமான IJT Sitara குறுகிய சுழல் சோதனைக்கு ஆயத்தமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு முப்பது நாட்களுக்குள் இந்த சோதனையை நிகழ்த்தப் போவதாகவும் HAL அதிகாரிகள் தெரிவித்தனர்,

இந்த சோதனை எட்டு மாதங்களுக்கு முன்பே செய்ய திட்டமிடப்படிருந்ததாகவும், இது ஒரு அக்னி பரீட்சையாகவும் இருக்கும் என்றும், விமானத்தின் நம்பகத்தன்மையையும், விமானியின் உயிரைக் காக்கவும் போர்களத்தின் அணுகுமுறையைக் இந்த விமானத்தில் உணர முடியும் என்றும் அதிகாரிகள் கூறினார்.

சோதனைகளில் வெற்றி பெற்றால் இந்த விமானத்தை தொடர்ந்து தயாரிக்கப் போவதாக HAL இயக்குனர் ராஜு தெரிவித்தார்.

இந்த விமானம் செய்ய 1999- லேயே பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது, இந்த சுழல் சோதனை தான் அதற்க்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது, எட்டு மாதங்களுக்கு முன்பே இந்த சுழல் சோதனையை செய்ய நினைத்ததாகவும், இருப்பினும் விமானத்தை சுழல வைக்கவோ விமானத்தை நடுவானிலேயே மொத்த செயல்பாட்டையும் நிறுத்தி மீண்டும் இயக்கவோ தங்களால் முடியவில்லை என்றும், இது ஒரு கடினமான பணி என்றும் எனவே அதை மிக கவனமாக செய்ய வேண்டும் என்றும் ஏனெனில் இதில் விமானத்திற்கும் விமானிக்கும் ஆபத்து அதிகம் என்றும் HAL இயக்குனர் ராஜு தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் HAL நிறுவனம் இங்கிலாந்தின் விமான நிறுவனமான BAE- யிடமிருந்து, நிறைய தகவல்களை பெற்று அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் விமானத்தில் பல மாறுதல்களை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

முதலில் ஸ்டால் எனப்படும் விமானத்தின் செயல்பாட்டை நிறுத்தி பின்பு மீண்டும் இயக்கும் சோதனையையும், அதன் பிறகே சுழல் சோதனையையும் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்,

இந்திய விமானப் படைக்கு சுமார் 85-க்கும் மேல் இடை நிலை பயிற்சி விமானங்கள் தேவைப்படுவதாகவும், இதுவரை இரண்டு பயிற்சி விமானங்களே தயாரிக்கப்பட்டு சோதனையில் உள்ளதாகவும், கடந்த 2003 ல் தயாரிக்கப்பட்ட அவை சுமார் 1000 மணி நேரம் பறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.