இடைநிலை பயிற்சி விமானம் தயாரிக்கும் பணிகளை நிறுத்த HAL லுக்கு விமானப்படை பரிந்துரை

இந்திய விமானப் படைக்கு நடுத்தர பயிற்சி விமானங்களை தயாரிக்க அரசு நிறுவனமான HAL லுக்கு மத்திய அமைச்சகமும் விமானப்படையும் அனுமதி வழங்கியது, இதற்கான திட்டம் மற்றும் செயல்பாடு 1997ல் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் செயல் திறன் குறைந்த என்ஜின் காரணமாக திட்டம் சிலகாலம் ஒத்தி வைக்கப் பட்டது, இருப்பினும் HAL தான் தயாரித்த இரண்டு சோதனை விமானங்களை அடிக்கடி சோதனை செய்து வந்தது, ஆனால் 2007 மற்றும் 2009 இல் இவ்விரு விமானங்களும் விபத்துக்குள்ளாயின, ஆனால் இவை சரி செய்யப்பட்டு மீண்டும் சோதனைக்கு தயார் படுத்தப்பட்டன.

அதிக திறன் கொண்ட என்ஜின்களை ரஷ்யா மிக கால தாமதமாக வழங்கியது, மேலும் பழைய சோதனை விமானத்தில் இவை பொருத்தப்பட்டு மீண்டும் சோதனை செய்யப்பட்டது, ஆனால் மீண்டும் 2011-ல் விபத்துக்குள்ளானது,

மேலும் இந்திய விமானப் படை 2009ல் HAL- டம் இந்த சிதாரா என்னும் பெயர் கொண்ட இடை நிலை பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டது, அதே வருடம் மேலும் 73 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது, ஆனால் இதுவரைக்கும் இந்திய விமானப்படைக்கு HAL ஒரு விமானம் கூட வழங்கவில்லை, எனவே இனி மேலும் அந்த விமானங்களுக்காக காத்திருக்க முடியாது என்று வெளிநாட்டு விமானங்களை வாங்க தயாராகி வருகிறது,

எனவே HAL இடம் இனிமேலும் அந்த விமானங்களுக்காக வேலை செய்ய வேண்டாம் என்று விமானப் படை தெரிவித்துள்ளது.

இதற்காக இதுவரை சுமார் 630 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

இந்திய விமானப் படை முதல் நிலை பயிற்சிக்காக சுவீடன் நாட்டு பிலாட்டஸ் PC 7 ( Pilatus PC 7 ) என்னும் விமானத்தையும், மேம்பட்ட பயிற்சிக்கு இங்கிலாந்தின் ஹாக் (BAE Hawk ) ரக விமானத்தையும் பயன்படுத்துகிறது.