அரசு விஐபி-க்கள் பயணம் செய்ய 16 புதிய Mi 17 ரக ஹெலிகாப்டர்கள்

இந்திய அரசின் உயர் மட்ட அமைச்சர்கள் அதிகாரிகள், பாதுகாப்பு துறை தளபதிகள் உள்நாட்டில் பயணம் மேற்கொள்ள ரஷ்ய நாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீன திருத்தி வடிவமைக்கப்பட்ட Mi 17v5 ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது,

இவை அரசு அலுவலர்களுக்காகவே சிறப்பாக மேம்படுதப்பப்ட்டுள்ளது, சாதாரண Mi 17 ஹெலிகாப்டர்களை விட சிறப்பான இருக்கைகள் வசதிகள் தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெறும், மொத்தம் 16 ஹெலிகாப்டர்களை இந்த பயன்பாட்டிற்காகவே ஒதுக்க விமானப் படை முடிவெடுத்துள்ளது.

இந்தியா ரஷ்ய நாட்டிடம் ஏற்கனவே சுமார் 148 Mi 17v5 ரக ஹெலிகாப்டர்களை வாங்கி விமானப் படையின் அவசியங்களுக்கு பயன்படுத்தி வருகிறது, இதிலிருந்து தான் அரசு அலுவலர்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டு வந்தது, மேலும் சமீபத்தில் நடந்த பாதுகாப்பு கொள்முதல் கூட்டத்தில் மேலும் சுமார் 48 ஹெலிகாப்டர்கள் வாங்க தீர்மானிக்கப்பட்டது,

இதிலிருந்து சுமார் 16 ஹெலிகாப்டர்களை விஐபி-க்கள் பயணம் செய்ய மாற்றங்கள் செய்து அரசின் பயன்பாட்டிற்கு கொடுக்கவும் விமானப் படை முடிவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு இத்தாலியை சேர்ந்த அகுஸ்தா நிறுவனத்திடம் சுமார் 12 ஹெலிகாப்டர்களை விஐபி-க்கள் பயணம் செய்ய வாங்க திட்டமிட்டிருந்தது, ஆனால் இதில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடை பெற்றதால் அந்த நாட்டிடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க தடை போடப்பட்டிருந்து,