ரகசிய தாக்குதல்களுக்காக நவீன ட்ரோன்-களை வாங்குகிறது விமானப்படை

பாதுகாப்புப் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் படி, இந்திய விமானப் படையின் அதிரடிப் படை பிரிவிற்கு சுமார் 27 கோடி ரூபாய் செலவில் 67 அதி நவீன சிறிய உளவு விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது,

இந்திய விமானப் படையின் அதிரடிப் படையான கருட், விமானப் படையின் தரை வழி சிறப்பு தாக்குதல்களுக்கும், விமானப் படை தளங்களை பாதுகாக்கவும், மற்றும் விமானப் படையின் ராடார் பகுதிகளை காக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, ஆனால் இவற்றின் பணிகள் மேலும் அதிகரிக்கப் பட்டுள்ளன, இவர்கள் எதிரி நாட்டின் ராடர் அமைப்புகளை தாக்கி அவற்றை செயலிழக்க செய்யவும், எதிரி விமானப் படை தளங்களுக்குள் சென்று விமானங்களில் நாச வேலைகள் செய்யவும் இவர்கள் விசேஷமாக பயிற்சி பெற்றுள்ளனர்,

மேலும் அமெரிக்க இஸ்ரேல் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் அவர்களின் அதிரடிப் படையினருடன் சேர்ந்து எதிரி நிலத்தில் விழுந்த சக நாடு விமானியை மீட்கும் யுக்தியிலும் சிறப்பாக செயல்பட பயிற்சி பெற்றவர்கள்,

இவர்களின் ஆயுத பலத்தை அதிகரிக்க ஏற்கனவே நவீன ஆயதங்கள் வழங்கப் பட்டுள்ளது, இருப்பினும் எளிதாக கைகளில் ஏந்திக் கொண்டு சென்று படைகளத்தில் பயன் படுத்தும் சிறிய உளவு விமானகள் இல்லை, எனவே அவற்றை வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது, இவ்வகை சிறிய விமானங்கள் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று உளவு பார்க்கவும், 30 நிமிடங்களுக்கு மேல் வானில் பறந்து தகவல்கள் வழங்குமாறும் இருக்கும்,

இந்திய விமானப் படை ஏற்கனவே பல நூறு பெரிய உளவு விமானங்களை பயன்படுத்துகிறது, இவை அனைத்துமே இஸ்ரேல் நாட்டிலிருந்து வாங்கப்பட்டவை