மாலத்தீவிடமிருந்து பவளப் பாறை தீவுகளை விலைக்கு வாங்குகிறது சீனா

மாலத்தீவிடமிருந்து பவளப் பாறை தீவுகளை விலைக்கு வாங்குகிறது சீனா

மாலத்தீவு நாட்டு பாராளுமன்றம் இன்று கூடி சீனாவின் கோரிக்கையான Atolls என்னும் பவளப் பாறை தீவு கூட்டங்களை விலைக்கு வாங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

இது ஒரு எச்சரிக்கையான சீனாவின் வளர்ச்சியைக் காட்டுவதாகவும், மேலும் இந்திய பெருங்கடலிலும் இந்தியாவின் கிழக்கிலும் வேரூன்றும் ஒரு செயலாகவும் இது பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவிற்கு வெகு அருகில் இருக்கும் தீவுகளை சீனா வாங்குவதால் இந்தியாவின் தென் பகுதியையும் அதனால் எளிதில் தாக்க முடியும்.

மேலும் மாலத்தீவு அரசைப் பொறுத்தவரையில் தேவை இல்லாத தீவுகளை விற்று வருமானத்தைக் கூட்டவே அது முயற்சிப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா வலுவாக வேரூன்றி விட்டது.

மேலும் இந்த பவளப் பாறை தீவுகளை ஒன்றிணைத்து சீன ஒரு பெரிய தீவாக மாற்றி விடவும் சாத்தியக் கூறுகள் உள்ளது, ஏற்கனவே அது தென் சீன கடல் பகுதியில் மணலை நிரப்பி ஒரு பெரிய செயற்கைத் தீவை உருவாக்கி அங்கு படைகளை நிறுத்தும் அளவிற்கு தயார்படுத்தி விட்டது.

ஆகவே அதே போன்றே இந்த தீவுகளையும் மாற்றி இந்திய பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

 

இந்தியாவிற்கு எதிரான செயலை மாலத்தீவு ஒரு போதும் செய்யாது, ராணுவ தளம் அமைக்க சீனாவிற்கு அனுமதி கொடுக்க மாட்டோம்.

சீனாவிற்கு பவளப் பாறை தீவுகளை விலைக்கு கொடுப்பதாக மாலத்தீவு அரசு கூறியிருந்தது, மேலும் சீனாவால் அங்கு ராணுவ தளம் அமைக்க முடியும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர், இதனால் இந்தியா மாலத்தீவிடம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.

இது குறித்து மாலத்தீவு துணை ஜனாதிபதி அகமது கூறுகையில், இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நிலைப்பாட்டையும் மாலத்தீவு எடுக்காது, மேலும் இந்தியா நினைக்கும் விதமாக சீனாவிற்கு கொடுத்த இடங்களில் ராணுவ தளம் அமைக்க அனுமதிக்க மாடும் என்றும் கூறினார்.