விமானப்படைக்கு இஸ்ரேல் நாட்டிலிருந்து தாக்கும் டிரோன்-களை வாங்க பாதுகாப்பு துறை ஒப்புதல்

இந்திய பாதுகாப்புப் படை சுமார் $400 மில்லியன் செலவில் சுமார் 10 IAI Eitan என்னும் ஆளில்லா தாக்கும் விமானங்களை விமானப்படைக்கு வாங்க ஒப்புதல் அளித்துள்ளது, இதன் மூலம் எல்லை தாண்டி இந்திய விமானங்கள் தாக்கும் சூழ்நிலை அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன, இதற்கான ஒப்புதலை ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகம் வழங்கி விட்டதாகவும், தகவல்கள் கூறுகின்றன.

இந்த விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தும் என்றும், ஏற்கனவே விமானப்படை பல வகையான இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருகிறது, அதிலும் எதிரி நாட்டின் ராடர்களை கண்டுபிடித்து அழிக்கும் ஹார்ப்பி மற்றும் ஹரூப் போன்ற முக்கிய டிரோன்-களும் அடங்கும்.

விமானப்படை இது போன்ற தாக்கும் டிரோன்-களை வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தை 2012-லேயே அணுகியதாகவும் ஆனால் இதுவரைக்கும் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகவும், விமானப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார், மேலும் அரசு வாட்டாரங்களின் தகவல்கள் படி இன்னும் 12 மாதத்திற்குள் இந்த டிரோன்-களை விமானப் படையில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியா தனது சொந்த தயாரிப்பான தாக்கும் டிரோன்-களான Rustom 1 மற்றும் Rustom 2 விமானங்களையே நம்பி இருந்தது, ஆனால் இதுவரை அவை தயாராகாதால் பாதுகாப்பு துறை அந்த வெற்றிடைத்தை நிரப்பவே இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த Eitan விமானம் IAI Heron விமானங்களின் அடிப்டையில் செய்யப்பட்டது, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தை இந்தியாவின் முப்படைகளும் உலகின் பல்வேறு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றது, ஆனால் ஆயுதம் சுமந்து செல்லும் Eitan விமானத்தை வாங்கும் முதல் நாடு இந்தியா தான், இந்த விமானத்தை இஸ்ரேல் பாலஸ்தீன் நாட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தியுள்ளது, தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் அடிக்கடி அமெரிக்கா தாக்குதல் நடத்தும் MQ 9 ரீப்பர் விமானமும் இந்த Eitan விமானமும் செயல்பாட்டில் ஒரே மாதிரி தான் இருக்கும்.

இந்த விமானத்தில் சுமார் ஒரு டன் வரை எடையுள்ள ஆயுதங்களை கொண்டு செல்லலாம், இது அதிக தூரம் மற்றும் அதிக நேரம் வானில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, வெளியில் சொல்லப்பட்ட தகவல்கள் படி விமானம் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து விண்ணில் பறந்தபடி இருக்கும், மேலும் சிவில் விமானங்கள் பறக்கும் 30,000 திலிருந்து 40,000 அடிக்கும் மேல் பறக்கும் ஆற்றல் கொண்டது இந்த Eitan, இதனால் சிவில் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் வானில் பல மணி நேரம் இருக்க முடியும், இஸ்ரேலில் ஒரு முறை இந்த விமானம் தொடர்ச்சியாக மொத்த ஆயுதங்களுடன் சுமார் 20 மணி நேரம் பறந்தது, அமெரிக்காவின் MQ 9 ரீப்பர் சுமார் 14 மணி நேரம் தான் பறக்கும் ஆற்றல் உடையது.

எனவே வரும் காலங்களில் இந்த வகை விமானத்தின் உதவியின் மூலம் எல்லை கடந்து குறைந்த செலவில் எதிரிகளை தாக்க முடியும்,