தென் சீனக் கடலில் இந்திய விமானங்களை பறக்க வைக்க பாதுகாப்புத் துறை யோசனை

தென் சீனக் கடலில் இந்திய விமானங்களை பறக்க வைக்க பாதுகாப்புத் துறை யோசனை

தென் சீனக் கடல் பகுதியில் இந்திய விமானங்களை பறக்க வைத்து சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது, தென் சீனக் கடல் எல்லையை சீனா சீக்கிரமே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளப் பகுதியாக அறிவிக்கப் போவதாக தகவல்களும் வெளியாகி உள்ளது, சீனா அவ்வாறு அறிவித்தால் அப்பகுதியில் பறக்கும் விமானங்கள் சீன அரசின் அனுமதியைப் பெற்று தான் பறக்க முடியும், எனவே முன்பு போல அந்த பகுதியில் சுதந்திரமாக விமானங்கள் பறக்க இந்தியாவும் தனது விமானங்களை தென் சீனக் கடல் மீது பறக்க வைத்து தனது எதிர்ப்பை காட்டவுள்ளது.

சீனா இதற்கு முன்பு தாய்வான் பகுதிக்கு அருகில் கிழக்கு சீனக் கடலில் இதே போன்ற பாதுகாக்கப்பட்ட எல்லைப் பகுதியை ADIZ- Air defense Identification Zone என்னும் பெயரில் அறிவித்திருந்தது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாய்வான், ஜப்பான் மற்றும் அமெரிக்க பயணிகள் விமானங்களும் ராணுவ விமானங்களும் சீனாவின் அந்த பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் மேல் பறந்தது, ஆனால் சீனா தனது போர் விமானங்களை அனுப்பி மீண்டும் மீண்டும் அந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களை எச்சரிக்கை செய்தது, இருப்பினும் அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளின் விமானங்கள் சீனாவின் இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த பகுதியின் மேல் பறந்து வருவதும், சீனா தனது போர் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை செய்வதும் வாடிக்கையாகி விட்டது,

இதற்கிடையே தென் சீன கடல் பகுதியில் செயற்கையாக ஒரு தீவை உருவாக்கி அதில் தனது ராணுவ தளத்தை அமைக்க சீனா தொடர்ந்து முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்று விட்டது, நவீன விமானங்கள் வந்து இறங்கி பின்பு அங்கிருந்து செல்லும் அளவு தீவை மேம்படுத்தி விட்டது, இதை முன்னமே அறிந்து கொண்ட அமெரிக்கா அந்த தீவின் மேல் தனது உளவு விமானங்களை பறக்க வைத்து சீனாவை அதிர்ச்சிக்குள் ஆக்கியது, அமெரிக்காவின் விமானத்தை பல முறை சீனா எச்சரிக்கை செய்தும் அதை அமெரிக்கா கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நோட்டமிட்டுக் கொண்டே இருந்தது,

மேலும் அந்த செயற்கை தீவை சுற்றி வேறு நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கும் சீனா தடை விதித்திருந்தது, ஆனால் இந்திய இந்தோனேசியா மற்றும் வியட்நாம் நாட்டுக் கப்பல்கள் அந்த தீவுக்கு மிக அருகிலேயே நகர்ந்து சென்றது, மேலும் இந்தியா சில கப்பல்களை பிலிப்பைன்ஸ் அல்லது வியட்நாம் நாட்டில் நிலை நிறுத்தவும் யோசித்து வருகிறது.

தென் சீனக் கடல் பகுதி எண்ணை வளம் மிக்க பகுதி ஆகும், இதை அங்கு உள்ள பல நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றது, ஆனால் அதன் பெரும்பகுதி வியட்நாம் நாட்டிற்கே சொந்தம், அதனால் வியட்நாம் நாட்டுடன் இந்தியாவின் ONGC நிறுவனம் ஒப்பந்தம் போட்டு அங்கு எண்ணையை எடுக்கும் வேலையே தொடங்க ஆயத்தமாக உள்ளது, இந்த திட்டம் ஆரம்பிக்கும் போதே சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது,

மேலும் எண்ணை எடுக்கும் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை ONGC தற்போது முழு வீச்சில் ஆரம்பித்து விட்டது, சீனா அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு முன்பே சீனாவை சிறிது சீண்டிப் பார்க்க பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது, இதனால் இந்தியாவின் ONGC பணியில் சீனா ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் தடுக்க முடியும் என்றும் பாதுகாப்புத் துறை நம்புகிறது,