தேஜாஸ் விமானத்தை வாங்குகிறதா இலங்கை விமானப்படை

இந்தியாவின் தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தை இலங்கை நாட்டிற்கு வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கையை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆனால் HAL/ADA அதிகாரிகள் இது குறித்து எதுவும் இதுவரை கூறவில்லை, இலங்கை விமானப்படை பழைய விமானங்களை நீக்கி விட்டு புதிய விமானங்களை சேர்க்க ஆயத்தமாகி வருகிறது, ஏற்கனவே அது பாகிஸ்தான் சீன தயாரிப்பான JF 17 விமானத்தை வாங்க தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியது.

இலங்கை சுமார் 20 போர் விமானங்களை தற்போது பயன்படுத்தி வருகிறது, இவை அனைத்துமே நவீன போர் களத்தில் போரிட தகுதியற்றவை, எனவே அவற்றை படையிலிருந்து விலக்கவும், அதிக திறனுள்ள நான்காம் தலை முறை போர் விமானங்களை படையில் சேர்க்கவும் ஆயத்தமாகி வருகிறது.

முதலாவதாக பாகிஸ்தான் அரசே JF 17 ரக போர் விமானத்தை வாங்க இலங்கை அரசை நிர்பந்தித்தது, மேலும் இலங்கை பாகிஸ்தான் உறவும் சுமூகமான நிலையிலேயே உள்ளது, கடந்த முறை இலங்கை சென்றிருந்த பாகிஸ்தான் விமானப் படை தளபதி விமான விற்பனை குறித்து பேசியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையே நவம்பர் மாத துவக்கத்தில் இலங்கையின் விமானப் படை தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார், மேலும் அவர் அங்கு சென்று பாகிஸ்தான் விமானப் படையின் போர் பயிற்சியை பார்வையிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன, மேலும் இந்த பயிற்சியில் பாகிஸ்தான் சீன தயாரிப்பான JF 17-ன் செயல்பாடே அதிகம் இருக்கும் என்றும் ராணுவ பார்வையாளர்கள் கருதுகின்றனர், இந்த பயணத்தில் இலங்கையின் புதிய போர் விமானத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் ராணுவ பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவின் தேஜாஸ் விமானம் இந்தியாவில் செய்யப்பட்டது என்றாலும் அதன் முக்கிய கருவிகள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டவை, தேஜாஸ் விமானத்தின் எஞ்சின் அமெரிக்காவிலும், அதன் ராடார் இஸ்ரேல் நாட்டிலும் ஏவுகணைகள் ரஷ்யாவிலிருந்தும் வாங்கப்பட்டவை,

எனவே தேஜாஸ் விமானத்தை வேறு நாட்டிற்கு விற்க வேண்டுமானால் மேற்கூறிய நாடுகளின் அனுமதி தேவை, அதிலும் குறிப்பாக அமெரிக்கா இலங்கைக்கு கண்டிப்பாக இந்த விமானத்தை வழங்க விடாது, இலங்கை மேலுள்ள போர் குற்றம் காரணமாக இலங்கைக்கு ஆயுத இறக்குமதியை தடை செய்துள்ளது அமெரிக்கா.

எனவே இலங்கை செய்திதாளின் இந்த செய்தி பொய்யாகவே இருக்க வாய்புகள் அதிகம்