ஆதேஷ் ரக விரைவு ரோந்து படகு

இந்திய கடலோரக் காவல் படையை உறுதிப்படுத்தும் விதமாக அதி நவீன ரக விரைவு ரோந்து படகுகளை கொச்சி கப்பல் கட்டும் தளம் தயாரித்து வழங்கி வருகிறது, அந்த வகையில் ஆதேஷ் அன்னும் பெயரில் சுமார் 20 விரைவு ரோந்து படகுகளை கட்டும் ஒப்பந்தத்தை கொச்சி கப்பல் கட்டும் தளம் பெற்றது, அதில் சுமார் 10 படகுகளை ஏற்கனவே இந்திய கடலோரக் காவல் படைக்கு கொடுத்து விட்டது,

சுமார் 300 டன் எடையுடன் கூடிய இந்த படகுகள் கடலில் சுமார் 61 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் , மேலும் இதில் ஒரு சிறிய மோட்டார் படகும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 35 அதிகாரிகளும் காவல் படை வீரர்களும் பயணிக்க முடியும், மேலும் இது சுமார் 3000 கிலோ மீட்டர் வரை சென்று தனது பணிகளை மேற்கொள்ளும் அளவிற்கு இதில் போதிய உணவு தண்ணீர் வசதிகள் உள்ளது.

இதில் அதி நவீன தொலை தொடர்பு சாதனங்களும், செயற்கைகோள் வழிகாட்டும் அமைப்புகளும் உள்ளன. எதிரிகளை தாக்க அதிக சக்தியின் கூடிய 30 mm தானியங்கி துப்பாக்கியும், பல சிறிய ரக துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளது

இந்த வரிசையில் 17 வது ரோந்து படகு இன்று கொச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.