நீர்மூழ்கிகளை அழிக்கும் காமோர்த்தா ரக போர் கப்பல்

எதிரி நீர்மூழ்கிகளை தேடிக் கண்டுபிடித்து அழிக்க இந்திய கப்பல் படை காமோர்த்தா என்னும் பெயரில் முதல் கட்டமாக சுமார் 4 போர் கப்பல்களை செய்ய திட்டமிட்டுள்ளது, இதில் ஒன்றை ஏற்கனவே படையில் சேர்த்து கொண்டு விட்டது, இரண்டாவது கப்பலை வரும் மாதங்களில் படையில் சேர்க்கவுள்ளது. அடுத்த இரண்டு கப்பல்களை 2016 மற்றும் 2017 இல் படையில் சேர்க்கவுள்ளது.

காமோர்த்தா ரக போர்க்கப்பலை இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள GRSE அரசு நிறுவனம் கட்டுகிறது. இந்த கப்பல் சுமார் 3500 டன் எடை கொண்டது, எதிரி நீர்மூழ்கி கப்பல்களை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கவும், தாக்கி அழிக்கவும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் எதிரி நீர்மூழ்கிகளை தேடி கண்டு பிடித்து அழிக்கும் ஹெலிகாப்டர்களையும் கொண்டு செல்ல முடியும்.

இதில் ஒரு பெரிய 76 mm தானியங்கி துப்பாக்கியும், எதிரி ஏவுகணைகளையும் விமானங்களையும் அழிக்க இரண்டு 30 mmதானியங்கி துப்பாக்கியும், இந்திய இஸ்ரேலிய அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணையான பாரக் 8 ம் உள்ளது.

எதிரி நீர்மூழ்கிகளை அழிக்க சுமார் 24 ராக்கெட்டுகளும் ஆறு கன ரக டோர்பீடோக்களும் உள்ளது.