நீர்மூழ்கி கப்பல்களை அழிக்க அமெரிக்காவிடமிருந்து ஹெலிகாப்படர்களை வாங்குகிறது இந்திய கப்பல் படை

இந்திய கப்பல் படை கப்பல்களிலிருந்து செயல்பட அமெரிக்க கப்பல் படையில் பயன்படுத்தப்படும் S 70 B ரக ஹெலிகாப்படர்களை வாங்க கப்பல் படை முடிவு செய்துள்ளது , இவ்வகை ஹெலிகாப்படர்கள் பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படும், முக்கியமாக எதிரி நீர்மூழ்கிகளை கண்டு பிடித்து அழிக்கவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளிலும் அதிகம் பயன் படுத்தப்படும்

இந்திய கப்பல் படையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட Sea King என்ற கப்பலே இதற்கு பயன்படுத்தப்பட்டது, இவை பழைய முறை தொழில் நுட்பத்தையே பயன்படுத்துவதால் நவீன எதிரி அச்சுறுத்தல்களை கண்டுபிடிக்க முடியாது,

அவற்றை மாற்ற சர்வதேச நாடுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன, முடிவில் அமெரிக்க S 70 யும் ஐரோப்பாவின் NH 90 யும் வெற்றி பெற்றன, இருப்பினும் பல காரணங்களுக்காக அமெரிக்க S 70 தான் தேர்வு செய்யப் பட்டது,

இதன் மூலம் அமெரிக்க ஹெலிகாப்படர் நிறுவனமான சிர்கோஸ்க்கி 16 ஹெலிகாப்படர்களை இந்திய கப்பல் படைக்கு வழங்கும், மேலும் 8 ஹெலிகாப்படர்களை வாங்கவும் திட்டம் உள்ளதாக கப்பல் படை செய்திகள் கூறுகின்றன.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன்பாக இரு நாட்டு குழுக்களும் இறுதி கட்ட விலை நிர்ணயிக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்