அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை ஆய்வு செய்தனர், இந்திய கப்பல் படை அதிகாரிகள்

இந்தியா அடுத்த தலை முறைக்கான அதி நவீன விமானம் தாங்கி கப்பலை கட்ட முடிவு செய்து, அதற்காக ஆரம்ப கட்ட நிதியை ஒதுக்கியுள்ளது, இந்த அதி நவீன விமானம் தாங்கி கப்பல், அமெரிக்காவின் சூப்பர் விமானம் தாங்கி கப்பலான USS Gerald R Ford கப்பலின் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது,

இதற்காக அந்த கப்பலில் உள்ள விமானம் ஏவும் அமைப்பான EMAL தொழில் நுட்பத்தை இந்திய கப்பல் படை கேட்டிருந்தது, மேலும் கப்பல் வடிவமைப்பிலும், அதன் அணு உதவியால் இயங்கும் என்ஜின்- ய் வடிவமைக்கவும் இந்தியா அமெரிக்காவிடம் உதவி கேட்டிருந்தது,

அதன் முதல் பகுதியாக, ஏற்கனவே இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பலகட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர், அடுத்த கட்டமாக, இந்திய கப்பல் படையின் மூத்த அதிகாரிகள் சிலர் அமெரிக்காவில் கட்டி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உள்ள அதி நவீன விமானம் தாங்கி கப்பலான USS Gerald R Ford ய் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர்,

பொதுவாக இது போன்ற அதி உயர் தொழில்நுட்பத்தால் இயங்கும் கப்பல்களை பார்வையிட வேறு நாட்டு அதிகாரிகள் இது வரை அனுமதிக்கப் பட்டதில்லை, இதுவே முதல் முறை ஆகும் என்று பாதுகாப்பு பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்,

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆய்வில், இந்திய அதிகாரிகள் பல்வேறு வகையான சோதனைகளை மேற்பார்வையிட்டனர்,

சீன கப்பல் படையின் வளர்ச்சியை தடுக்க இந்திய கப்பல் படையை வலுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் பல முறை இரு அரசுகளிடமும் வலியுறுத்தி வந்தனர், இதன் முதல் கட்டமாக இந்தியாவிற்கு அதி நவீன நீர்மூழ்கி அழிக்கும் விமானங்களை இந்தியாவிற்கு அளித்தது அமெரிக்கா, தற்போது அமெரிக்காவின் சூப்பர் விமானம் தாங்கி கப்பல் தொழில் நுட்பத்தை தர ஆயத்தமாக உள்ளது,