இந்திய ராணுவத்திற்கு அதி நவீன V 22 ஹெலிகாப்டரை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டம்

இந்திய கப்பல் படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் இந்த வருட தொடக்கத்தில் போயிங் விமான நிறுவன அதிகாரிகள் V 22 ஹெலிகாப்ட்டர் விமானத்தை பற்றி விளக்கி அதன் செய்முறைகளை எடுத்துக்காட்டினர், தற்போது இந்திய ராணுவத்திற்கும் அதை செய்து காட்ட ஆவலாக இருப்பதாக போயிங் தெரிவித்துள்ளது,

இந்த V 22 ஹெலிகாப்டரைப் போல மேல்லெழும்பி பறக்கவும் நாடு வானில் நிற்கவும் உலாவவும் செய்யும் அதே நேரத்தில் தனது இறக்கையை மடக்கி விமானம் போல அதிக உயரத்தில் அதிக வேகத்தில் பறக்கும் தன்மையும் உடையது, இது அமெரிக்க கப்பல் படையில் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது,

இதன் முக்கிய பயனாக எதிரி நாட்டிற்க்குள் நுழைந்து அவர்களுக்கு தெரியாமல் தாக்குதல் நடத்தவும், அங்கிருந்து அதிக வேகத்தில் தப்பி வரவும் சிறப்பாக வடிவமைக்கப் பட்ட ஹெலிகாப்ட்டர் ஆகும்,

இந்திய ராணுவத்தில் இதன் பயன்பாடு அதிகம் தேவைப்படாது, ஏனெனில் இது தாழ்வாக பறக்கும் போது இதன் சக்தியால் வீடுகளின் மேற்கூரையே பிய்த்துக் கொண்டு போய் விடும், மேலும் அதிக உயரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் எடை குறைந்த லேசான உபகரணங்களினாலேயே தங்களது இருப்பிடத்தை வைத்துள்ளது,

எனினும் இந்திய கப்பல் படை இந்த விமானத்தை வாங்க அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறது, கப்பலுக்கு அதி வேகமாக சாதனங்களை கொண்டு செல்லவும், அதிக தூரத்தில் இருக்கும் கப்பலை எளிதில் சென்றடையவும், மேலும் கடல் சார்ந்த மீட்புப் பணிக்கும் இந்த வகை ஹெலிகாப்ட்டர் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், இந்திய கப்பல் படை இந்த வகை ஹெலிகாப்ட்டர் விமானத்தை வாங்கும் போது அதை தனது விமானம்தாங்கி கப்பலிலேயே பயன்படுத்தும் என்று எதிர் பார்க்க படுகிறது, இதை ஒரு பறக்கும் ராடர் அமைப்பாகவும், எதிரி விமானத்தின் மின்னணு சிக்னல்களை குழப்பவும், விமானம்தாங்கி கப்பலிலிருந்து ஏவும் விமானத்திற்கு எதிரியைக் குறித்த தகவல்களை வழங்கவும், மேலும் விமானங்களுக்கு வானத்திலே எரிபொருள் நிரப்பவும் பயன்படுத்தும் என்றும் கப்பல் படை அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.

இந்த வகை விமானத்தை விற்பனை செய்ய அமெரிக்கா தடை செய்துள்ள போதிலும், மிக நெருங்கிய நட்பு நாடுகளான, ஜப்பான் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.