இஸ்ரேலிய கப்பல் படை தளபதி இந்தியா வருகை,

இஸ்ரேல் நாட்டின் கப்பல் படை தளபதி வைஸ் அட்மிரல் ராம் ரூட்பார்க் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார், அவருக்கு டெல்லி செங்கோட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது, அவரும் இந்திய கப்பல் படை தளபதியான அட்மிரல் தோவனும் பரஸ்பரம் சந்தித்து பல்வேறு கட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேசினார்.

இதில் முக்கியமாக, இந்திய இஸ்ரேலிய கூட்டு முயற்சியில் உருவான பாரக் ஏவுகணைப் பற்றி பேசப்பட்டது, சீக்கிரமே அதை இந்திய போர்க்கப்பல்களில் பயன்படுத்தவும் பேசப்பட்டது, மேலும் சமீபத்தில் கொச்சி துறைமுகத்தில் நிறுவப்பட்டு தற்போது செயல் பாட்டில் உள்ள துறைமுக பாதுகாப்பு அமைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது,

மேலும் இந்தியாவின் நவீன போர்க்கப்பலான INS Trikand இஸ்ரேலில் ஹைபா துறைமுகத்தில் நட்பு ரீதியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது, அங்கும் இந்திய அதிகாரிகள் இஸ்ரேலிய கப்பல் படை அதிகாரிகளுடன் கப்பல் படை சவால்கள் குறித்து கலந்தாலோசித்து வருகின்றனர்