முதல் கப்பல் படை பயிற்சியை மேற்கொள்ளப் போகிறது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்

 

 

முதல் முறையாக இந்திய கப்பல் படையும் ஆஸ்திரேலிய கப்பல் படையும் வங்காள விரிகுடா பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன, AUSINDEX என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பயிற்சி விசாகப்பட்டினம் கடல் பகுதியில் செப்டம்பர் மாத இடையில் நடைபெறவுள்ளது, இதில் முக்கியமாக எதிரி நீர்மூழ்கிகளை தேடி அழிக்கும் Anti Submarine Warfare போர் முறை தான் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் எதிரி நீர்மூழ்கிகளை அழிக்கும் P 3 விமானமும், காலின்ஸ் ரக நீர்மூழ்கி கப்பலும் அதோடு ஒரு உதவிக் கப்பலும் மற்றுமொரு போர்க்கப்பலும் பங்கேற்கவுள்ளன.

இந்தியா சார்பில், எதிரி நீர்மூழ்கிகளை அழிக்கும் P 8 விமானமும், ஒரு கோமார்தா ரக நீர்மூழ்கி அழிக்கும் கப்பலும் ஈடுபடுத்தப்படவுள்ளது,

இந்த போர் பயிற்சியில், எதிரியின் நீர்மூழ்கி கப்பலுக்கு அகப்படவுள்ள ஒரு உதவிக் கப்பலை எவ்வாறு மீட்பது என்றும், அந்த எதிரி நீர்மூழ்கியை எப்படி தேடி அழிக்கவும் முடியும் என்றும் ஒத்திகைகள் மேற்கொள்ளப்படவுள்ளது,

சீனா அதிக அளவில் நீர்மூழ்கி கப்பல்களைக் கொண்டுள்ளது, அதன் காரணமாகவே சமீபத்தில் நடந்த பல கப்பல் படை பயிற்சிகள் நீர்மூழ்கிகளை எவ்வாறு அழிப்பது என்றே ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, இந்திய பெருங்கடல் மட்டுமல்லாது பசுபிக் கடலிலும் சீன மெல்ல வேருன்ற நினைப்பது ஆஸ்திரேலியா மற்றும் அண்டை நாடுகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது,

இந்திய மற்றும் பசிபிக் கடலில் தேவை இல்லாமல் சீன நீர்மூழ்கிகள் நடமாடுவது சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாகவும், அதைத்தடுக்க இது போன்ற பயிற்சிகள் தேவை என்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரி வில்லியம் தலைநகர் டில்லியில் அறிவித்தார், மேலும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இது போன்ற சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த பயிற்சி வரும் ஆண்டுகளில் நீடிக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சீக்கிரம் அது பற்றி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்,