மூன்று தல்வார் ரக போர் கப்பல்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்

ரஷ்யா தனது கப்பல் படைக்காக மூன்று தல்வார் ரக போர் கப்பல்களை கட்டி முடித்தது, ஆனால் உக்ரைன் நாட்டுடன் ஏற்பட்டுள்ள போரினால், அந்த கப்பல்களுக்கு என்ஜின்களை வழங்க உக்ரைன் அரசு மறுத்து விட்டது, இதனால் கட்டி முடிக்கப்பட்ட அந்த கப்பல்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டு விட்டது, எனவே அந்த கப்பல்களை வேறு நாட்டிற்கு விற்க ரஷ்யா முடிவு செய்துள்ளது,

இந்திய அரசு உக்ரைன் நாட்டுடன் அமைதியை கடை பிடித்து வருவதால் அந்த கப்பல்களை இந்தியாவிற்கு வழங்க ரஷ்யா விருப்பம் தெரிவித்தது, இதனால் ரஷ்யாவிடம் கப்பல்களை வாங்கி, உக்ரைன் நாட்டிடமிருந்து என்ஜின்களை வாங்கி இந்தியாவில் வைத்து பொருத்தி, அதை கப்பல் படைக்கு கொடுக்க அரசு நினைத்திருந்தது, இருப்பினும் முதலில் இதை வேண்டாம் என்று கூறிய இந்திய கப்பல் படை இதில் சிறிதளவு ஆர்வம் காட்டியுள்ளது, இந்திய கப்பல் படை மொத்தம் ஆறு தல்வார் ரக போர் கப்பல்களை பயன்படுத்தி வருகிறது,

இந்த கப்பல்களை அநேகமாக ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு துறை இதை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் உக்ரைன் நாட்டிடமிருந்து என்ஜின்களை வாங்கி அதன் கப்பல் கட்டும் தளமான பிபவவ்-ல் வைத்து கப்பலை முழுவதுமாக கட்டி முடித்து இந்திய கப்பல் படைக்கு வழங்க தீர்மானித்துள்ளது, ஒரு வேளை இந்திய கப்பல் படை இதை நிராகரித்தால் அதை வேறு நாடுகளுக்கு வழங்கவும் முடிவெடுத்துள்ளது, இதன் மூலம் அதற்கு மிக அதிகமான இலாபம் கிடைக்கும்,

ப்ரீகேட் வகையை சேர்ந்த இந்த கப்பல்கள் முக்கியமான போர் கப்பல்களை பாதுகாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பெரிய விமானம் தாங்கி கப்பல்கள், பெரிய டிஸ்ட்ராயர் கப்பல்களை பாதுகாக்க பயன்படுகிறது, இதில் மூன்று வகையான விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன, அதிக தூர தாக்குதலுக்காக சிட்டில் ரக ஏவுகணையும் ( தாக்கும் தூரம் 35 km , குறுகிய தூர இலக்கை தாக்க இக்லா ரக சிறிய ஏவுகணையும், கடைசி பாதுகாப்பாக AK 630 ரக துப்பாக்கியும் உள்ளது,

எதிரி நீர்மூழ்கிகளை தாக்க, இரண்டு பல குழல் ராக்கெட் ஏவும் அமைப்பு உள்ளது, இது சுமார் 4 கிலோமீட்டர்கள் வரை சென்று ஆழ்கடலுக்குள் சென்று வெடிக்கக்கூடியது, சுமார் 1000 மீட்டர் ஆழம் வரை இது செல்லும், மேலும் நான்கு டோர்பெடோ குழல்களும் உள்ளன, அதோடு எதிரி நீர்மூழ்கியைக் கண்டு பிடிக்க ஒரு ஹெலிகாப்டரும் இதில் உள்ளது,

இந்தியாவிடம் ஏற்கனவே ஆறு தல்வர், மூன்று சிவாலிக் , மூன்று பிரம்மபுத்திரா ரக ப்ரீகேட் போர் கப்பல்கள் உள்ளன, மேலும் ப 17 எ என்ற திட்டத்தின் கீழ் சுமார் ஆறு மேம்படுத்தப்பட்ட சிவாலிக் ரக போர் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது.